sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சிந்தனைக் களம்

/

டிரம்ப் வெற்றி- இந்தியாவிற்கு பலமா, பாதகமா? சிந்தனைக்களம்

/

டிரம்ப் வெற்றி- இந்தியாவிற்கு பலமா, பாதகமா? சிந்தனைக்களம்

டிரம்ப் வெற்றி- இந்தியாவிற்கு பலமா, பாதகமா? சிந்தனைக்களம்

டிரம்ப் வெற்றி- இந்தியாவிற்கு பலமா, பாதகமா? சிந்தனைக்களம்

1


PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்க அரசியலை யோ, டிரம்ப்பையோ பற்றி தெரியாதவர்கள்கூட, 'யார்ரா அந்த பையன்...? நான்தா அந்த பையன்...!' என்று டிரம்ப் பெற்ற வரலாற்று வெற்றியை பார்த்து, மூக்கு வியர்க்க வியக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக இந்திய பிரதமர் ஆவாரா, என்று உலகமே ஆர்வமுடன் எதிர்பார்த்ததைப்போலவே, டிரம்ப், இரண்டாவது முறையாக வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் ஆவாரா என்று சர்வதேசமும் உன்னிப்பாக கவனித்தன.

ரஷ்யா - உக்ரைன், இஸ் ரேல் - காஸா - ஈரான் தாக்குதல்களால், எல்லா தேசமும், 'மூன்றாம் உலகப்போர்' பீதியில் இருக்கும் இந்த வேளையில், அமெரிக்காவில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று, அந்நாட்டின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பார்லிமென்டின் இரு அவைகளிலும் முன் எப்போதும் இல்லாத வகையில் குடியரசு கட்சிக்கே அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

'அமெரிக்கா யார் மீதும் போர் தொடுக்காது. போர்களை முடிவுக்கு கொண்டுவரும் 'என்று தனது வெற்றி உரையில் டிரம்ப் குறிப்பிட்டு போர் பீதியை குறைத்திருக்கிறார். அமெரிக்காவில் வெற்றி பெற்று பதவிக்கு வரும் ஜனநாயக கட்சி அதிபர்கள், இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதும், குடியரசு கட்சி அதிபர்கள் விலகி நிற்பதும் நாம் பார்த்த கடந்தகால வரலாறு.

'அமெரிக்காவின் மோடி' என்று டிரம்ப்பையும், 'இந்தியாவின் டிரம்ப்' என்று மோடியையும் சொல்லலாம். அந்த அளவிற்கு, முதலில் தன் நாடு என்ற அக்கறை கொண்டவர்கள்.அமெரிக்கா முன்னேறுவதற்கு, வெளிநாட்டு தொழில் நுட்ப மூளைகள் வேண்டும். ஆனால், உள்ளூர் மக்கள் பார்க்கும் எளிய வேலைகளுக்கு வெளிநாட்டு மனிதவளம் தேவை இல்லை என்பதுதான் டிரம்ப்பின் நோக்கம்.

அகதிகள் நுழையாமல்,அமெரிக்க எல்லைகளைமூடுவதும், குடியேற்றத்தை முறைப்படுத்துவதும், தொழில், வேலைத்துறைகளில் அமெரிக்கர்களை முன்னிலைப்படுத்துவதும்தான் டிரம்ப்பின் முக்கிய குறிக்கோள்.

டிரம்ப் வந்தால், 'நமக்கு வேலை காலி' என்று அச்சம் கொண்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள்கூட இந்த முறை டிரம்புக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். அதுதான் ஏன், என்று அரசியல் விமர்சகர்களுக்கே புரியவில்லை. கருத்துக்கணிப்பில் பின்தங்கி இருந்த டிரம்ப், தேர்தல் முடிவுகளில் முந்தி இருக்கிறார்.

'நான் ஆட்சிக்கு வந்தால்,அமெரிக்காவில் இறக்குமதியாகும் மற்ற நாடுகளின்பொருட்களுக்கான வரியை, 10 சதவீதம் ஆகவும், சீன இறக்குமதி பொருட்களுக்கான வரியை 60 சதவீதம் ஆகவும் உயர்த்துவேன்' என்று பிரச்சாரத்தில் முழங்கியவர் டிரம்ப் என்பது கவனிக்கத்தக்கது. டிரம்ப் அதிபராவதால், இந்தியாவுக்கு உடனடியாக வர்த்தகத்துறையில் எந்த பாதிப்பும் வராது.

சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக, தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போனது. கடந்த தீபாவளி நாளில், ஒரு பவுன் ரூ. 59 ஆயிரத்து 640 என்ற புதிய உச்சம் தொட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டிரம்ப் வெற்றிபெற்றதுமே, தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ஆயிரத்து 320 ரூபாய் வரை குறைந்தது. தொழில்துறை, முதலீட்டு துறைகள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒரு தோல்விக்குப்பிறகு, வரலாற்று வெற்றியை பெற்றுள்ள டெனால்ட் டிரம்ப், ஏற்கனவே அதிபராக இருந்தபோது, பாரத பிரதமர் மோடியுடன் பல்வேறு விதமான நல்லுறவு ஒப்பந்தங்கள், பரிந்துரைகள் நடந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடாக கருதப்படுகிறது. இதுதவிர உலக பொருளாதாரத்தில், இந்தியா 5வது இடத்திலிருந்து 3வது இடத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வெகுவிரைவில், ஜெர்மன், ஜப்பான் ஆகிய நாடுகளை ஓவர்டேக் செய்து, 3வது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா மாறும். அதனால், அமெரிக்காவும், புதிய அதிபர் டிரம்ப்பும், புறக்கணிக்க முடியாத நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.

மேலும், சீனாவுடன் முன்பு மேற்கொண்டிருந்த தடையற்ற வர்த்தகத்தினால், அமெரிக்க உற்பத்தித்துறையும், உள்ளூர் வேலை வாய்ப்பும் பாதிக்கப்பட்டதை அறிந்து வைத்து அதன் மீது நடவடிக்கையும் எடுத்து வந்த டிரம்ப், சீனாவை அமெரிக்காவிலும், உலக அரங்கில் இருந்து ஓரங்கட்ட, இந்தியாவை நாடுவதைத்தவிர வேறு வழியில்லை.

ஆகையால், டிரம்ப் பொறுப்பேற்றபிறகு, இருநாட்டுக்கும் சாதகமான சூழ்நிலைதான் நிலவுமே தவிர, பாதகத்திற்கும், புறக்கணிப்பிற்கும் வாய்ப்பு இல்லை.

இதுதவிர, டிரம்ப் அதிபராவதால் இந்தியாவுக்கு சில கூடுதல் நன்மைகள் காத்திருக்கிறது. ஆஸ்திரேலிய, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படும் சூழ்நிலை ஏற்படும்.

இதுதவிர, ஐ.டி., - பார்மா ஏற்றுமதிக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால், நமக்கான சாதகங்கள் பிரகாசமாக உள்ளன.

பொதுவாக, டிரம்ப், சர்வதேச அளவில் ஒரு சில நாடுகளுடன்தான் நட்பு வைத்திருப்பார். அவர் அதிபராவதை சில நாடுகள் வரவேற்கும். பெரும்பாலான நாடுகள் வரவேற்காது. 'அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே' என்று சொல்லி அதிபராகி இருக்கும் டிரம்ப்பால், உலக நாடுகளுக்கு ஒரு 'பாசிட்டிவ்' எனர்ஜி கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

தங்கம் விலை ஏன் சரிகிறது?


டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, தங்கம் விலை குறைந்தது. ஏனென்றால், தங்கம் எப்போதும் ஒரு மாற்றுக்கான சொத்து என்று சொல்வார்கள். 'இன்டர்நேஷனல் எக்சேஞ்சுக்காக' தங்கம் வைத்துக் கொள்கிறார்கள். இப்போது டாலர் விலை அதிகமாவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இங்கிருக்கும் ஸ்டாக்கை விற்றுவிடுகிறார்கள். அதனால் தங்கத்தில் அதிகமானோர் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள்.

இப்போது, டிரம்ப் வந்தவுடன், அமெரிக்க மற்றும் உலக பொருளாதார சூழ்நிலையில் சின்ன உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால், பணத்தை திரும்பவும் தங்கத்தில் இருந்து எடுத்து டாலரில் முதலீடு செய்ய ஆரம்பிக்கின்றனர். இதனால் தங்கம் விலை குறைந்தது. ஏற்ற இறக்கங்களுடன் தங்க மார்க்கெட் இருந்தாலும், விலை தொடர்ந்து சரிய வாய்ப்பு இல்லை.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது. இருந்தபோதும், நிறைய சவால்கள் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா நன்றாக வளர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், டிரம்ப் அதிபராவது, இந்தியாவுக்கு கூடுதல் உந்து சக்தியாக இருக்கும். நம்முடைய வளர்ச்சிக்கு உத்வேகத்தை கொடுக்கும்.

இந்தியாவுக்கு பாதகமான சூழ்நிலை இல்லையென்றாலும், சில சவால்கள் இருக்கிறது என்று சொல்லலாம். பொதுவாக, எல்லா உற்பத்தியும் அமெரிக்காவிலேயே செய்ய வேண்டும் என்று டிரம்ப் சொல்வார்.

அதையேத்தான் இப்பவும் செய்வார். அதனால் மற்ற நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு கூடுதல் வரி போடுவார். இதை மற்ற நாடுகளும் பின்பற்றும். இதன்மூலம், சர்வதேச அளவில் ஒரு பொருளாதார இறுக்கம் ஏற்படும்.

இறுதியாக, உலகமே வாய் பிளக்க வைக்கும் நம் நாட்டின் ஜி.எஸ்.டி.,வசூல், டிஜிட்டல் பரிவர்த்தனை, டாலரை புறக்கணித்து, இந்திய ரூபாயில் வர்த்தகம், விண்வெளி ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ராணுவ உபகரணங்கள் தயாரிப்பு, பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு, போர் விமானங்கள் தயாரிப்பு, ஜவுளி ஏற்றுமதி, உலகிலேயே பெரிய மனிதவளம், அதிக இளைஞர் சக்தியுடன் உலக நாடுகளுடன் பெரிய தொடர்பில் இருக்கும் இந்தியாவை நோக்கி, டிரம்ப், ஒரு கரம் அல்ல, இரு கரம் நீட்டுவதற்கான வாய்ப்புகளே அதிகம்!

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்(Karthikeyan.auditor@gmail.com)






      Dinamalar
      Follow us