இயற்கையும் நவீனமும் கை கோக்குமிடம் நேரு சர்வதேச பள்ளி
இயற்கையும் நவீனமும் கை கோக்குமிடம் நேரு சர்வதேச பள்ளி
UPDATED : அக் 10, 2026 12:38 PM
ADDED : அக் 10, 2026 12:36 PM
இயற்கையான சூழலில், நல்ல காற்றோட்டத்துடன் அமைந்துள்ளது நேரு சர்வதேச பள்ளி. மாணவர்கள் சுத்தமான காற்றையும், ஆரோக்கியமான சூழலையும் அனுபவிக்கும் வகையில் பள்ளி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையோடு இணைந்த கற்றல் முறையுடன், நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மாணவர்களின் கல்வி மேம்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் சிந்திக்கும் திறன், கற்பனைத்திறன் மற்றும் செயல்படும் திறன் வளர்க்கப்படுகிறது.
கல்வியுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கால்பந்து மற்றும் இறகுப்பந்து மைதானங்கள், சிறுவர் - சிறுமியருக்கான விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அறிவியல் பாடங்களுக்கான ஆய்வகங்கள், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பள்ளி வளாகத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பள்ளிப் பேருந்துகளின் இருப்பிடத்தை அறியும் வகையிலும் கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒழுக்கம், நற்பண்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் கற்றல் முறையுடன், மாணவர்களின் எதிர்கால இலக்கை நோக்கி அவர்களை வழிநடத்தி, கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் தனித்திறன் வளர்ப்பு என அனைத்து தளங்களிலும் முழுமையான ஆளுமையாக உருவாக்குவதே நேரு சர்வதேச பள்ளியின் நோக்கமாக உள்ளது.
