தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்திப்போமா/தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…

தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…

தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…


UPDATED : அக் 10, 2026 12:38 PM

ADDED : அக் 10, 2026 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:38 PM ADDED : அக் 10, 2026 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எந்த ஒரு இடத்திலும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கவும், ஒருவரின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் தகவல் தொடர்புத் திறன் மிக அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இன்றைய போட்டி நிறைந்த கார்ப்ரேட் உலகில், ஒருவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், தனது எண்ணங்களைச் சரியாக வெளிப்படுத்தும் திறன் இல்லையெனில் அவரது உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை.

துல்லியமாக…



இதனால் வெளிப்படையான உரையாடலை வைப்பது சூழலை மிகவும் சுமுகமாக மாற்றும். தகவல் தொடர்பு என்பது வெறும் வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்வது மட்டுமல்ல; அது இலக்குகளைத் தெளிவுபடுத்தி, வீண் குழப்பங்களையும், சச்சரவுகளையும் தவிர்க்க உதவுகிறது.

சிறந்த உரையாடல்



தகவல் தொடர்பில் மிக முக்கியமானதும், ஆனால் பலராலும் தவிர்க்கப்படுவதுமான பகுதி மற்றவர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதாகும். ஒருவர் பேசும் போது குறுக்கிடாமல், அவர் சொல்லவரும் கருத்தை முழுமையாக உள்வாங்குவது தவறான புரிதல்களைப் பெருமளவில் குறைக்கும். பிறரது கருத்துகளுக்கு மதிப்பளித்து, அவர் கூறியதன் பொருளைப் புரிந்து கொண்ட பின் பதிலளிப்பதே சிறந்த உரையாடலுக்கு முதல் படி.

உடல்மொழி



நாம் பேசும் வார்த்தைகளை விடவும் நமது உடல்மொழியும், முகபாவனைகளும், குரலின் தொனியுமே அதிக தகவல்களை மற்றவர்களுக்குக் கடத்துகின்றன. உரையாடலின் போது நேருக்கு நேர் கண் தொடர்பைப் பேணுவதும், நிமிர்ந்த நிலையில் அமர்வதும் நமது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். வார்த்தைகளும் உடல்மொழியும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகும் போது மட்டுமே நாம் சொல்ல வரும் விஷயம் எதிரில் இருப்பவரை முழுமையாகச் சென்றடையும்.

தெளிவு



கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் எழுதும் போது சுருக்கமாகவும், சொல்ல வந்த விஷயத்தை நேரடித் தன்மையோடும் குறிப்பிடுவது நேரத்தைச் மிச்சப்படுத்தும். தேவையில்லாத வார்த்தைகளைத் தவிர்த்து, தெளிவான சொற்களைப் பயன்படுத்துவது வாசிப்பவருக்குப் புரிதலை எளிதாக்கும். ஒவ்வொரு உரையாடலுக்கு முன்பும் நாம் என்ன பேசப் போகிறோம் என்பதை மனதிற்குள் தெளிவுபடுத்திக் கொள்வது உரையாடலை மேலும் தெளிவாக்கும்.

தகவல் தொடர்புத் திறனை ஒரே நாளில் வளர்த்துக் கொள்ள முடியாது; அது அன்றாடப் பயிற்சியின் மூலம் மேம்படக்கூடிய ஒரு திறன். சக நண்பர்களிடம் தொடர்ந்து கருத்துக்களைக் கேட்டு பெறுவதும், நமது குறை நிறைகளை அறிந்து, திருத்திக் கொள்வதும் திறனை வளர்க்க உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us