PUBLISHED ON : மே 29, 2022

எல்.ஜி., நிறுவனம், இந்தியாவில், அதன் 'ஓ.எல்.இ.டி., டிவி' வரிசையில் 19 மாடல்களை ஒரே சமயத்தில் அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஓ.எல்.இ.டி., மாடலில் 42 அங்குலத்திலிருந்து, 97 அங்குலம் வரையிலான அளவு கொண்ட 'டிவி'கள் அறிமுகம் ஆகியுள்ளன.
இவற்றின் விலை 90 ஆயிரம் ரூபாயில் துவங்கி, 75 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. அண்மை காலமாக, இந்தியாவில், ஓ.எல்.இ.டி., டிவிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 63 ஆயிரம் ஓ.எல்.இ.டி., டிவிகள் விற்பனை ஆகியிருக்கும் நிலையில், நடப்பு ஆண்டில் 2 லட்சம் டிவிகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் ஓ.எல்.இ.டி., டிவி சந்தையில் 80 சதவீத பங்களிப்பை கைப்பற்றும் முயற்சியில் எல்.ஜி., நிறுவனம் இறங்கி உள்ளது. எல்.ஜி., நிறுவனம், இந்த டிவிகளை இந்தியாவில் உள்ள புனே ஆலையில் தயாரிக்கிறது.
