தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஏர் பியூரிபையருடன் ஒரு ஹெட்போன்

ஏர் பியூரிபையருடன் ஒரு ஹெட்போன்

ஏர் பியூரிபையருடன் ஒரு ஹெட்போன்


PUBLISHED ON : டிச 18, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா காலத்தில் மிகவும் ஆச்சரியமாகப் பேசப்பட்ட சாதனங்களில் ஒன்று, 'டைசன் ஸோன் ஹெட்போன்'.

மற்ற 'பிரீமியம் ஹெட்போன்'களில் இருக்கும் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' உள்ளிட்ட அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகளுடன், கூடுதலாக, இதில் காற்றை சுத்தப்படுத்தும் 'ஏர் பியூரிபையர்' வசதியும் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதன் பிறகு இந்த ஹெட்போன் குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், தற்போது சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதில் இருக்கும் 'ஏர் பில்ட்டர்'கள், காற்றை 99.99 சதவீதம் சுத்தப்படுத்தி வழங்குகிறது. மேலும், இதில் உள்ள 'எலக்ட்ரோஸ்டாட்டிக் கார்பன் பில்ட்டரை' 12 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றினால் போதுமானது. இரண்டு வண்ணங்களில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த ஹெட்போன் விற்பனைக்கு வரும் என்றும் தெரியவந்துள்ளது.

இதன் விலை 77 ஆயிரத்து, 500 ரூபாயிலிருந்து துவங்கும் என கூறப்படுகிறது. டைசன் நிறுவனத்தின் இணைய தளம் வாயிலாக மட்டுமே இந்த ஹெட்போன் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us