தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'டச் சென்சார் கன்ட்ரோல்' வசதியுடன் முதன் முதலாக ஒரு 'நெக்பேண்டு'

'டச் சென்சார் கன்ட்ரோல்' வசதியுடன் முதன் முதலாக ஒரு 'நெக்பேண்டு'

'டச் சென்சார் கன்ட்ரோல்' வசதியுடன் முதன் முதலாக ஒரு 'நெக்பேண்டு'


PUBLISHED ON : டிச 18, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த நவம்பர் மாதத்தில், 'நெக்ஆன் 101' எனும் 'ஒயர்லெஸ் நெக்பேண்டு இயர்போனை' அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது புதிதாக 'நெக்ஆன் 102' எனும் நெக்பேண்டு இயர்போனை அறிமுகம் செய்துள்ளது, 'ஸ்வாட்' நிறுவனம்.

உள்நாட்டு நிறுவனமான ஸ்வாட், முந்தைய மாடல் இயர்போனை விட, மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், இந்த புதிய இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்வாட் நெக் ஆன் 102 சிலிக்கான் நெக்பேண்டு மற்றும் சிலிக்கான் இயர் டிப்ஸ் கொண்டதாகும். முந்தைய மாடலை போல அல்லாமல், பயன்படுத்தாத போது இயர்பட்சை காந்தத்தை பயன்படுத்தி, ஒட்டி வைத்துக் கொள்ளலாம்.

இந்த இயர்போனில் குறிப்பிடத்தக்க அம்சமாக, 'டச் சென்சார் கன்ட்ரோல்' வசதியை குறிப்பிடலாம். நெக்பேண்டில் முதன் முதலில், இத்தகைய டச் சென்சார் வசதியுடன் அறிமுகம் ஆகியிருக்கும் இயர்போன் இது தான். இதில் 'பிசிக்கல் பட்டன்'கள் எதுவும் கிடையாது.

இதில் உள்ள சென்சார் டச் பட்டன்களை தொடும் போது, அதில் இருக்கும் எல்.இ.டி., விளக்குகள் அதிரும். இதில் உள்ள 10 மி.மீ., டிரைவர், 'எச்.டி., ஸ்டீரியோ சவுண்டை' வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுஉள்ளது.

போன் அழைப்புகளின் போது, சுற்றுப்புற சப்தங்களை தவிர்க்க ஏதுவாக, இ.என்.சி., தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

அத்துடன் இதில் 'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதியும் உள்ளது. இதை, 30 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். 8 நிமிட சார்ஜிங்கில், 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என, ஸ்வாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதன் விலை 899 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us