உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 16, 2022

அ நிறம் | அளவு
'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்றுள்ள, 'எச்.எம்.டி.ஐ.குளோபல்' நிறுவனம், இந்தியாவில், 'நோக்கியா டி 10' எனும், டேப்லெட் ஒன்றை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
அந்த சமயத்தில் இந்த டேப்லெட், 'வைபை' இணைப்பு மட்டுமே கொண்டதாக மட்டுமே அறிமுகம் ஆனது. தற்போது, 4ஜி எல்.டி.இ., நெட்வொர்க் இணைப்பு வசதி கொண்ட மாடல் அறிமுகம் ஆகியுள்ளது.
'வைபை ஒன்லி' மாடலில் உள்ள அதே அம்சங்கள், இந்த டேப்லெட்டிலும் இடம்பெற்றுள்ளன. விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது.
சிறப்பம்சங்கள்
* 8 அங்குல எல்.சி.டி. டிஸ்ப்ளே
* எச்.டி., துல்லியம்
* 8 எம்.பி., சதுர வடிவ கேமரா
* 2 எம்.பி., செல்பி ஸ்நாப்பர்
* ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.,
* 5,250 எம்.ஏ.எச்., பேட்டரி
* 10 வாட் சார்ஜிங்
விலை:
3 ஜி.பி.,+ 32 ஜி.பி., : 12,799 ரூபாய்
4 ஜி.பி.,+ 64 ஜி.பி., : 13,799 ரூபாய்
