உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 20, 2022

அ நிறம் | அளவு
'மைக்ரோசாப்ட்' நிறுவனம், கடந்த 15ம் தேதியன்று, 'விண்டோஸ் 11' உடன் கூடிய, 'சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோ'வை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதனுடைய விற்பனை, மார்ச் 8ம் தேதியன்று துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப், கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லேப்டாப் பல்வேறு விதமான மாடல்களில் வந்துள்ளது.
இவை 14.4 அங்குல பிக்ஸல்சென்ஸ் புளோ டச் ஸ்கிரீன் திரையும், 11வது தலைமுறை இன்டெல் கோர் எச் 35 பிராசஸரும் கொண்டவையாகும். மேலும், டால்பி அட்மோஸ் வசதியுடன் கூடிய, குவாட் ஒமினிசோனிக் ஸ்பீக்கரும் இதில் இடம்பெற்றுள்ளது.
இதுவரை வந்த சர்பேஸ் வகை லேப்டாப்களில், இதுதான் அதிக சக்திகொண்டது, என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.விலை 1.66 லட்சம் ரூபாயிலிருந்து துவங்கி, 3.50 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.
