PUBLISHED ON : அக் 23, 2022

தற்போது ஸ்மார்ட் போன்களை விட, ஸ்மார்ட் வாட்சுகளின் அறிமுகம் அதிகரித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள், புதிது புதிதாக, ஸ்மார்ட் வாட்சுகளை மேம்படுத்தி, அறிமுகம் செய்து வருகின்றன. அப்படி அண்மையில் அறிமுகம் ஆன சில ஸ்மார்ட் வாட்சுகள்:
'போட் வேவ் அல்டிமா மேக்ஸ்'
உள்நாட்டு நிறுவனமான 'போட்', புதிதாக 'போட் வேவ் அல்டிமா மேக்ஸ்' எனும் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
மிகப் பெரிய டிஸ்ப்ளே, மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இதன் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இருப்பினும், புளூடூத் காலிங் வசதி இல்லாதது ஒரு குறையே.
சிறப்பம்சங்கள்:
1.9 அங்குல டிஸ்ப்ளே
எச்.டி., துல்லியம்
100 விதமான முக அமைப்புகள்
நீர், துாசி புகாமல் தடுக்கும்
இதய துடிப்பு, ஆக்சிஜன் கண்காணிப்பு
25 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
15 நாட்கள் வரை தாங்கும் பேட்டரி
இரு வண்ணங்கள்
விலை: 2,499 ரூபாய்.
'கிஸ்மோர் குளோ லக்ஸ்'
'கிஸ்மோர்' நிறுவனம், முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
'கிஸ்மோர் குளோ லக்ஸ்' எனும் பெயரில் அறிமுகம் ஆகியுள்ள இந்த வாட்ச், 'அமோல்டு' பேனல் கொண்டது.
இந்த வாட்ச், ஆண்களுக்கான நிறுவனத்தின் பிரீமியம் வாட்ச் ஆகும்.
சிறப்பம்சங்கள்:
1.32 அங்குல வட்ட டயல்
அமோல்டு பேனல்
நீர்புகாதிருக்க ஐ.பி.67 சான்று
உடல் வெப்பநிலை கண்காணிப்பு
இதய துடிப்பு கண்காணிப்பு
ஆக்சிஜன் அளவீடு
100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
200 வகையான முக அமைப்புகள்
தோல் மற்றும் ஸ்டீல் ஸ்ட்ராப்
விலை: 3,499 ரூபாய்.
'மோலைப் சென்ஸ் 520'
இந்திய நிறுவனமான 'மோலைப்' அண்மையில் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
'மோலைப் சென்ஸ் 520' எனும் இந்த ஸ்மார்ட் வாட்ச், 'புளூடூத் காலிங்' வசதி கொண்டது. 'ஸ்க்ரோல் கீ' வசதி இருப்பதால், வாட்சில் இருக்கும் அம்சங்களை எளிதாக ஸ்க்ரோல் செய்து பார்க்க முடியும்.
சிறப்பம்சங்கள்:
1.32 அங்குல ஐ.பி.எஸ்., டிஸ்ப்ளே
மெட்டாலிக்அலுமினியம் பாடி
பக்கவாட்டில் ஸ்க்ரோல் கீ
புளூடூத் காலிங் வசதி
இதய துடிப்பு, ஆக்சிஜன் கண்காணிப்பு
15 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
7 நாட்கள் தாங்கும் பேட்டரி
7 வண்ணங்கள்
விலை: 3,199 ரூபாய்.
'அம்பரேன் வைஸ் இஆன் புரோ'
'அம்பரேன்' நிறுவனத்தின் 'வைஸ்' ஸ்மார்ட் வாட்ச் வரிசையில், தற்போது 'அம்பரேன் வைஸ் இஆன் புரோ' எனும் புதிய வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வாட்ச், 1.85 அங்குல 'லுசிட் டிஸ்ப்ளே' கொண்டது. 'க்யூப் டயல்' மற்றும் 'சிலிகான் ஸ்ட்ராப்' ஆகியவை இந்த வாட்சில் இடம்பெற்று உள்ளன.
ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள் இதில்உள்ளன.
மேலும், 'புளூடூத் காலிங்' வசதி இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. 'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதி இருப்பதால், குரல் வழியாகவும் பல உத்தரவுகளை செயல்படுத்த முடியும்.
நீர், துாசி உட்புகுவதை கட்டுப்படுத்தும்.
இந்த வாட்சை, ஒருமுறை சார்ஜ் செய்தால், 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
விலை : 1,799 ரூபாய்.
