PUBLISHED ON : ஜன 08, 2023

'டாய்லெட்'டுக்கு உங்களால் எவ்வளவு செய்ய முடியும்? உங்கள் பதில் 12 ஆயிரம் டாலருக்கும் மேல், அதாவது, கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய முடியும் என்றால், 'அலெக்ஸா' மற்றும் எல்.இ.டி., விளக்குகள் கொண்ட, 'ஸ்மார்ட் டாய்லெட்'டை விரைவில் இறக்குமதி செய்து கொள்ள முடியும்.
அண்மையில், 'நுகர்வோர் மின்னணு கண்காட்சி 2023'ல், இந்த 'ஸ்மார்ட் டாய்லெட்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
'கோஹ்லர் நுமி 2.0' எனும் இந்த 'ஸ்மார்ட் டாய்லெட்'டில், இல்லாத வசதிகள் கிடையாது எனச் சொல்லலாம்.
நீரால் சுத்தம் செய்யும் வசதியுடன், 'அல்ட்ரா வயலெட் கிளீனிங், டெம்பரேச்சர் மற்றும் பிரஸ்ஸர் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் பிளஷிங், டியோடரைசிங், உட்காரும் இடத்தை சூடாக்கி கொள்வது, ஏர் டிரையர்' என எக்கச்சக்க வசதிகள் உள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தையும், கையடக்க 'ரிமோட்' வாயிலாகவோ அல்லது, 'கோஹ்லர் கனெக்ட்' செயலி வாயிலாகவோ கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமின்றி; 'அலெக்ஸா'வைப் பயன்படுத்தி, குரல்வழி ஆணைகளை பிறப்பிக்கலாம்.
விரைவில் இந்த 'டாய்லெட்' சந்தைக்கு வர உள்ளது.

