PUBLISHED ON : ஜன 15, 2023

வெறுமனே நேரம் மட்டுமே பார்க்கும் வகையில் வந்த கைக்கடிகாரம், இன்று 'ஸ்மார்ட்' அவதாரம் எடுத்து, அதில் இல்லாத வசதிகளே இல்லை என்று ஆகிவிட்டது.
போன் பேச, 'வாட்ஸ் ஆப்' பார்க்க என்பதில் துவங்கி, ஆக்சிஜன் அளவு, இதயத்துடிப்பு என அனைத்தையும் அறிந்து கொள்ளும் வசதிகள் இடம்பிடித்துவிட்டன.
அடுத்த கட்டமாக, ஸ்மார்ட்வாட்சில் வேறு என்ன வசதி களை கொடுக்கலாம் என மண்டை காய்ந்து கொண்டிருக்கின்றன அனைத்து வாட்ச் தயாரிப்பு நிறுவனங்களும்.
இதற்கிடையே, பி.ஒய்.டி., நிறுவனம், அதன் ஸ்மார்ட்வாட்ச் வாயிலாக ஒருவர் மது அருந்தி உள்ளாரா, எவ்வளவு அருந்தி உள்ளார் என்பதை அறிந்து கொள்ளும் வசதியை வழங்க உள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதற்கான காப்புரிமைக்கு, இந்நிறுவனம், சீனாவில் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கணவரை 'வாட்ச்' பண்ணலாம்.

