தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஆப்பிளின் 'நமக்கு நாமே' திட்டம்

ஆப்பிளின் 'நமக்கு நாமே' திட்டம்

ஆப்பிளின் 'நமக்கு நாமே' திட்டம்


PUBLISHED ON : மே 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆப்பிள்' நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஐபோனை அவர்களே சுயமாக பழுது நீக்கிக் கொள்ள வசதியாக, அதற்கு தேவையான கருவிகளை வாடகைக்கு விடத் துவங்கி உள்ளது.

இந்த திட்டம், முதற்கட்டமாக, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதியில், பிற நாடுகளில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. நம்மிடம் இருக்கும் போனுக்கு ஏற்ற, முழுமையான கருவி தொகுப்பை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். இந்த கருவிகளை நாம் ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், வாடகை தான் கண்ணைக் கட்டுகிறது. அமெரிக்காவில் வாடகை 3,800 ரூபாய் ஆகிறது. ஏதாவது ஒரு கருவியை தொலைத்து விட்டால், அதற்கும் ஒரு தொகையை போட்டு தீட்டி விடுவார்கள். பேட்டரி, டிஸ்ப்ளே, சிம் டிரே, ஸ்பீக்கர், கேமரா போன்றவற்றை நாமே பழுது நீக்கிக் கொள்ள இயலாது என கூறப்பட்டுள்ளது.

இவற்றை தவிர, நாம் ரிப்பேர் பண்ண, போனில் வேறு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us