PUBLISHED ON : மே 08, 2022

'லாஜிடெக்' நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து பல புதிய மவுசுகளை அண்மைக்காலமாக அறிமுகம் செய்து வருகிறது. இந்த வகையில், தற்போது புதிதாக ஒரு கேமிங் மவுசை அறிமுகம் செய்துள்ளது. 'லாஜிடெக் ஜி புரோ எக்ஸ் சூப்பர்லைட்' எனும், 'ஒயர்லெஸ் கேமிங்' மவுசை அறிமுகம் செய்துள்ளது. இந்த மவுஸ், அமெரிக்காவில், கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளது. இ - ஸ்போர்ட்டுகளுக்காகவே இந்த மவுசை வடிவமைத்திருப்பதாக, லாஜிடெக் அறிவித்து உள்ளது. மேலும், இதில் 'அடுத்த தலைமுறை புரோ கிரேடு ஒயர்லெஸ் டெக்னாலஜி' கொண்டிருப்பதாகவும், மிகவும் எடைகுறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் எடை 63 கிராமுக்கும் குறைவே.
இதில் மொத்தம் 5 பட்டன்கள், பல்வேறு பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டு உள்ளன. இதில் நிறுவனத்தின் ஒளிவேக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
விலை: 13,595 ரூபாய்
