PUBLISHED ON : மே 08, 2022

கம்ப்யூட்டரை தாக்குவது போல, வைரஸ், நம் ஸ்மார்ட்போனை தாக்குமா என்றால், நிச்சயமாக தாக்கும். கடந்த ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 35 லட்சம் 'மால்வேர் வைரஸ்' தாக்குதலுக்கு, மொபைல் போனை பயன்படுத்துவர்கள் ஆளாகி இருப்பதாக, சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'காஸ்பர்ஸ்கை' தெரிவித்துள்ளது.
வைரஸ் எப்படி போனுக்குள் வருகிறது?
குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வாயிலாக போனுக்குள் வருகின்றன. அவற்றில் இருக்கும் 'லிங்க்' வாயிலாக தாக்குதல் அரங்கேறுகிறது.
வைரஸ் என்ன செய்யும்?
* போனின் செயல்பாடுகளை குறைக்கும்
* உங்கள் தனிப்பட்ட தகவல்களை 'ஹேக்கர்'களுக்கு அனுப்பும்
* உங்கள் இருப்பிடத்தை 'டிராக்' செய்யும்
* உளவறியவும் பயன்படும்.
வைரஸ் தாக்கியிருப்பதை எப்படி அறிவது?
* மோசமான செயல்திறன்
* செயலிகள் ஓப்பன் ஆவதற்கு நீண்ட நேரமாகுதல்
* அவ்வப்போது செயலிகள் 'கிராஷ்' ஆவது
* பேட்டரி சார்ஜ் வேகமாக குறைவது
* மொபைல் டேட்டா நுகர்வு அதிகரிப்பது
* எதிர்பாராமல் போன் சூடாகுவது.
என்ன செய்யலாம்?
* முதலில் மேற்கொண்டு பாதிக்காமல் முயற்சிக்கலாம்
* 'ஆன்டி வைரஸ்' செயலி வாயிலாக ஸ்கேன் செய்யவும்
* போன் ஸ்டோரேஜிலிருந்து 'கேச்சி பிரவுசிங் ஹிஸ்டரி, வெப்சைட் டேட்டா' ஆகியவற்றை கிளியர் செய்யவும்
* கடைசிப் புகலிடமாக, உங்கள் டேட்டாகளை 'பேக் அப்' செய்துவிட்டு, 'பேக்டரி ரீசெட்' செய்யலாம்
* ரீசெட் செய்வதன் வாயிலாக மால்வேர்களை நீக்க முடியும்.
முன் எச்சரிக்கையாக என்ன செய்யலாம்?
* வழக்கத்துக்கு மாறான பாப் அப், மெயில், குறுஞ்செய்திகளை கிளிக் செய்ய வேண்டாம்
* அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டும் நிறுவவும்
* ஜெயில்பிரேக்கிங், போனில் மாற்றம் செய்வது போன்றவற்றை தவிர்க்கவும்
* செயலியை நிறுவும் போது தேவையானவற்றுக்கு மட்டும் அனுமதிகளை அதற்கு வழங்கவும்
* உங்கள் டேட்டாக்களை அவ்வப்போது 'பேக் அப்' செய்து கொள்ளவும்
* போன் சாப்ட்வேரை எப்போதும் அப்டேட்டில் வைத்துக் கொள்ளவும்.
