
வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த, 'ஸ்பாட்டிபை' செயலி, ஒருவழியாக இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆகிவிட்டது. இனி இசை ரசிகர்கள் ஸ்பாட்டிபையை ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., வெப், டெஸ்க்டாப் என அனைத்திலிருந்தும் கேட்டு ரசிக்கலாம்.
ஸ்பாட்டிபையை இலவசமாகவும் கேட்டு ரசிக்கலாம் அல்லது அதன் பிரீமியம் சேவையை சந்தா கட்டியும் கேட்கலாம்.
இலவசமாக கேட்பதென்றால், கூடவே விளம்பரங்களையும் சகித்துக் கொள்ள வேண்டியதிருக்கும். விளம்பரங்கள் போன்ற எந்த தடையும் இல்லாமல் கேட்க விரும்பினால், பிரீமியத்தை தேர்வு செய்யலாம். ஆப்பிள் மியூசிக் போலவே, மாத கட்டணம், 119 ரூபாய். மாணவர்கள் எனில், 50 சதவீதம் தள்ளுபடி என, அறிவித்திருக்கின்றனர்.
மேலும், பிரீமியம் சேவையை ஒருநாள் மட்டும், ஒரு வாரம் மட்டும், ஆறு மாதங்களுக்கு, ஓர் ஆண்டுக்கு என விரும்பும் வகையில் கட்டணம் செலுத்தி கேட்கலாம்.
அருமையான தரத்துடன், லட்சக்கணக்கான பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

