உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 22, 2021

அ நிறம் | அளவு
'பி - டிரான்' நிறுவனத்தின், 'பி_டிரான் பாஸ்பட்ஸ் ஜெட்ஸ் ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த பாஸ்பட்ஸ் சாதனத்தில் சிறப்பான வசதி என்னவென்றால், இதற்கான சார்ஜிங் கேஸில், பேட்டரி திறன் எவ்வளவு இருக்கிறது என்பதை காட்ட, ஒரு டிஜிட்டல் இண்டிகேட்டர் உள்ளது. மேலும் ஹை பை ஸ்டீரியோ, டீப் பாஸ் ஆகியவையும் கொண்டிருக்கிறது.மற்றபடி வழக்கமான நீர்புகாத வசதி, புளுடூத் வி5.0 இணைப்பு, குரல் வழி உத்தரவு வசதி என, அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.மூன்று அல்லது நான்கு நொடிகளிலேயே, ஸ்மார்ட்போனுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். 5 மணி நேரம் தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடிய அளவிலான பேட்டரி இருக்கிறது.
விலை: 999 ரூபாய்
