தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பிடிரானின் சகாய விலை சாதனங்கள்

பிடிரானின் சகாய விலை சாதனங்கள்

பிடிரானின் சகாய விலை சாதனங்கள்


PUBLISHED ON : டிச 11, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய நிறுவனமான 'பிடிரான்' ஸ்மார்ட் வாட்ச், ஒயர்லெஸ் இயர்பட்ஸ் என இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது; இரண்டும் சகாய விலை சாதனங்களாகும்.

'பிடிரான் போர்ஸ் எக்ஸ் 11 பி' ஸ்மார்ட் வாட்ச்

வட்ட வடிவில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், 'ஜிங்க் அலாய் மெட்டாலிக் பிரேம்' கொண்டது. நீர், துாசி புகாமலிருக்க ஐ.பி.68 தரம் கொண்டது. 1.3 அங்குல எச்.டி., டிஸ்ப்ளே கொண்ட இந்த வாட்சின் முகத்தை, 100க்கும் மேற்பட்ட விதங்களில் மாற்றிக் கொள்ளலாம்.

ஆரோக்கிய கண்காணிப்பு , ஸ்போர்ட்ஸ் மோடு என பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் புளூடூத் காலிங் வசதியும் உள்ளது.

வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதியுடன், 260 எம்.ஏ.எச்., பேட்டரியும் இடம்பெற்று உள்ளது.

சாதாரண மோடில் 5 நாட்களும்; புளூடூத் காலிங் மோடில் 3 நாட்களும் இதன் பேட்டரி தாங்கும்.

விலை: 1,499 ரூபாய்

'பிடிரான் பாஸ்பட்ஸ் பேர்ல்' இயர்பட்ஸ்

இந்த ஆடியோ சாதனம், 'பெப்பிள்' வடிவ 'சார்ஜிங் கேஸ்' உடன் வந்துள்ளது. இதில் பேட்டரிக்கான எல்.இ.டி., இண்டிகேட்டரும் உள்ளது. 13 மி.மீ., டிரைவர் கொண்ட இந்த இயர்பட்சில், எச்.டி., மைக்கும் இடம்பெற்றுள்ளது.

புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்ட இதன் பேட்டரி, 28 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விலை: 799 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us