தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பெரிய 'டிவி' வாங்குவது வேஸ்ட்!

பெரிய 'டிவி' வாங்குவது வேஸ்ட்!

பெரிய 'டிவி' வாங்குவது வேஸ்ட்!


PUBLISHED ON : ஏப் 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. 'பிரீஸ்டைல்' எனும் பெயரில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த புரொஜெக்டர் வாயிலாக, 100 அங்குல அளவிலான திரையில், வீடியோக்களை திரையிடலாம்.

இந்த புரொஜெக்டரின் சிறப்பம்சமாக கருதப்படுவது, இதை வெகு எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பது தான்.பயணங்களின் போது இலகுவாக எடுத்துச் செல்லும் வகையில், இந்த புரொஜெக்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதன் எடை, மொத்தமே 800 கிராம் என்பதால், வெளியே எடுத்துச் செல்வதில் எந்த சிரமமும் இருக்காது. இந்த புரொஜெக்டரை பயன்படுத்தி, 30 அங்குலத்திலிருந்து 100 அங்குலம் வரையிலான அளவில் படங்களை பார்க்கலாம்.180 டிகிரி வரை இதை சுழற்றவும் முடியும்.

மேலும், இதை மேஜை, தரை சுவர் மேற்கூரை என எங்கு வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்த இயலும். இதன் இன்னொரு குறிப்பிடத்தக்க சிறப்பு, திரையிடுவதற்காக வெள்ளை நிற பின்னணி எதுவும் தேவையில்லை. சுவரின் நிறம் எதுவாக இருந்தாலும், எந்த அளவுக்கு திரையிடுகிறோமோ அந்த பகுதியை இதுவே வெள்ளையாக அமைத்துக் கொள்ளும்.

அத்துடன், இந்த புரொஜெக்டர், 'யு டியூப், நெட்பிளிக்ஸ்' என ஓ.டி.டி., தளங்களையும் சப்போர்ட் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இனி 65 அங்குலம், 75 அங்குலம் என, பெரிய அளவிலான 'டிவி' வாங்குவது குறித்து கொஞ்சம் யோசிக்க வேண்டும் போலிருக்கிறது.

விலை: 84,500 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us