தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/100 மீட்டர் வரை தொடர்பில் இருக்கலாம்

100 மீட்டர் வரை தொடர்பில் இருக்கலாம்

100 மீட்டர் வரை தொடர்பில் இருக்கலாம்


PUBLISHED ON : ஜூன் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலை பார்க்கும் இடங்கள், பொது இடங்கள் போன்ற இடங்களில் இருக்கும்போது, தெளிவாக போன் அழைப்புகளை ஏற்று பேச வசதியாக, 'ஜாப்ரா' நிறுவனம், 'ஜாப்ரா டால்க் 65' எனும், 'பிரீமியம் புளுடூத் மோனோ ஹெட்செட்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஹெட்செட், 80 சதவீதம் அளவுக்கு சுற்றுப்புற சப்தங்களை கட்டுப்படுத்தி வழங்கும் என, ஜாப்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 100 மீட்டர் வரை, புளுடூத் இணைப்பு வாயிலாக தொடர்பில் இருக்கலாம். 'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதியும் இதில் உள்ளது.

மேலும் எச்.டி., வாய்ஸ் தெளிவுக்காக இரட்டை 'மைக்ரோபோன் டெக்னாலஜி' இதில் இடம்பெற்றுள்ளது.

இதன் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால், 14 மணி நேரம் தாக்குப்பிடிக்கும். எந்த காதில் வேண்டுமானாலும் பொருந்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

விலை: 8,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us