தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/இந்த ஆண்டு ஆப்பிளின் வரவுகள்

இந்த ஆண்டு ஆப்பிளின் வரவுகள்

இந்த ஆண்டு ஆப்பிளின் வரவுகள்


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆப்பிள்' நிறுவனம், பல்வேறு புதிய சாதனங்களை, நடப்பு ஆண்டின் முதல் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. 'ஐபோன் எஸ்.இ 5 ஜி., ஐபேடு ஏர் எம் 1, மேக் ஸ்டூடியோ, ஸ்டூடியோ டிஸ்பிளே' ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஐபோன் எஸ்.இ., 5 ஜி., விற்பனை, இம்மாதம் 18ம் தேதியன்று, இந்தியாவில் துவங்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

ஐபோன் எஸ்.இ., 5ஜி.,

ஆப்பிளின் பட்ஜெட் போனான இது, 64 ஜி.பி., 128 ஜி.பி., 256 ஜி.பி., என மூன்று மாடல்களில், மூன்று வண்ணங்களில், 5ஜி வசதியுடன் வந்துள்ளது. இதன் விலை 43,900 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

ஐபேடு ஏர் எம்1

'எம்.1 சிப்' உடன், ஐபேடு ஏர் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த சிப் 5ஜி இணைப்பு வசதியும் கொண்டுள்ளது. இந்த ஐபேடில் 12 எம்.பி., அல்ட்ரா வைடு முன்பக்க கேமரா கொடுக்கப் பட்டுள்ளது. 64 ஜி.பி., மற்றும் 256 ஜி.பி., என இரண்டு தேர்வுகளுடன் வந்துள்ளது. 'வைபை' மற்றும், 'வைபை பிளஸ் செல்லுலார்' என இரு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபேடு ஏர் துவக்க விலை 54,900 ரூபாய் / செல்லுலார் மாடல் துவக்க விலை 68,900 ரூபாய்.

மேக் ஸ்டூடியோ எம்.1

மேக் ஸ்டூடியோ, 'எம் 1 சிப்' வரிசையில் இரு மாடல்களை வெளியிட்டுள்ளது. 'மேக் ஸ்டூடியோ எம் 1 அல்ட்ரா' மற்றும் 'மேக் ஸ்டூடியோ எம்1 மேக்ஸ்' என இரு மாடல்கள் வந்துள்ளன. 'எம் 1 அல்ட்ரா' இரண்டு எம்.1 மேக்ஸ் சிப் இணைக்கப்பட்டு வந்துள்ளது. இது எம்.1 சிப் ஐ விட, எட்டு மடங்கு வேகமாக இருக்குமாம். மேக்ஸ் ஸ்டூடியோ விலை, 1.90 லட்சம் ரூபாயிலிருந்து துவங்குகிறது.

ஸ்டூடியோ டிஸ்பிளே

எந்த ஒரு 'மேக்' சாதனத்துடனும் இணைத்துக் கொள்ளும் வகையிலான 'ஸ்டூடியோ டிஸ்பிளே' எனும் மானிட்டரும் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த மானிட்டர் 27 அங்குல, 5கே ரெட்டினா திரை கொண்டதாகும். முழுக்க அலுமினிய பாடி கொண்டதாகும். இந்த மானிட்டரில் 'ஆப்பிள் ஏ 13 பயோனிக்' சிப் இடம் பெற்றுள்ளது. இதனால் சிறந்த ஆடியோ மற்றும் கேமரா அனுபவத்தை பெறமுடியும். ஆறு ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம் கொண்டிருக்கிறது. டால்பி அட்மோஸ் வசதியும் உண்டு. துவக்க விலை 1.43 லட்சம் ரூபாய்.

பச்சை வண்ண ஐபோன் 13

'ஐபோன் 13' மற்றும் 'ஐபோன் 13 புரோ' ஆகிய மாடல்களில், புதிதாக 'பச்சை' மற்றும் 'அல்பைன் பச்சை' எனும் இருவண்ணங்கள் சேர்க்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வண்ணங்களிலும் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த போன்கள் 18ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இவற்றின் விலை 1.20 லட்சம் மற்றும் 1.30 லட்சம் ரூபாயில் துவங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us