உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 04, 2022

அ நிறம் | அளவு
ஒருவழியாக, இம்மாதம் 7ம் தேதியன்று, 'ஆப்பிள்' நிறுவனம், அதன் 'ஆப்பிள் மீட்' எனும் நிறுவனத்தின் சாதனங்களுக்கான அறிமுக நிகழ்ச்சியை அரங்கேற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த அறிமுக நிகழ்ச்சி, நிறுவனத்தின் இணையதளம் மற்றும் யு டியூப் ஆகியவற்றில், நேரலையாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில், 'ஐபோன் 14' மாடல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம், நான்கு மாடல்களில் இந்த போன் அறிமுகம் ஆகிறது.
'ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 புரோ, ஐபோன் 14 புரோ மேக்ஸ்' என நான்கு மாடல்களில் வருகிறது. ஐபோன் 14 மாடல்கள் தவிர, புதிய ஸ்மார்ட்வாட்சும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
