உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 28, 2022

அ நிறம் | அளவு
கிட்டத்தட்ட 32 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலான ஒரு புதிய ஹெட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, 'பிளாபங்கட்' நிறுவனம்.
அதிகம் கையைக் கடிக்காத விலையில் வந்திருக்கும் இந்த 'பிளாபங்கட் பி.எச்.51' எனும் ஹெட்போன், புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. நீலம் மற்றும் கறுப்பு என இரு வண்ணங்களில் அறிமுகம் ஆகியிருக்கும் இதில், 40 மி.மீ., டிரைவர்கள் உள்ளன.
இதில் வெளிப்புற சப்தங்களை தடுக்கும் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' வசதியும் உள்ளது. பத்து நிமிடம் சார்ஜ் செய்தால், ஒன்றரை மணி நேரம் வரை பயன்படுத்தலாம். 480 கிராம் எடை கொண்டது.
விலை: 2,999 ரூபாய்.
