தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'கார்மின்' ஸ்மார்ட் வாட்சுகள்

'கார்மின்' ஸ்மார்ட் வாட்சுகள்

'கார்மின்' ஸ்மார்ட் வாட்சுகள்


PUBLISHED ON : ஜூன் 05, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவைச் சேர்ந்த, 'கார்மின்' நிறுவனம், இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. 'கார்மின் போர்ரன்னர் 255' மற்றும் 'போர்ரன்னர் 955' என இரண்டு ஸ்மார்ட் வாட்சுகளை முதல்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் பிற சந்தைகளிலும் அறிமுகம் ஆகும்.

இந்த இரண்டு வாட்சுகளில், போர்ரன்னர் 255 ஒரு நுழைவுநிலை பட்ஜெட் வாட்ச் ஆகும். போர்ரன்னர் 955 சற்று விலை உயர்ந்த 'எலைட்' ரக வாட்ச் ஆகும். பெரிய பேட்டரி, பில்டு இன் ஜி.பி.எஸ்., ஸ்போர்ட் மோடுகள், ஆரோக்கிய கண்காணிப்பு என அனைத்து அம்சங்களும் இரண்டு வாட்சிலும் இடம்பெற்றுள்ளன. இதன் மியூசிக் மாடலில் கிட்டத்தட்ட 500 பாடல்களை சேமித்துக் கொள்ளலாம்.

இவை, ஒரு முறை சார்ஜ் செய்தால், 12 - 15 நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும். கார்மின் போர்ரன்னர் 255 மூன்று மாடல்களில் அறிமுகம் ஆகியுள்ளது. இவற்றின் விலை, 27 ஆயிரம் ரூபாயிலிருந்து, 31 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.

கார்மின் போர்ரன்னர் 955 இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சூரிய ஒளியில் செயல்படும், சோலார் மாடல் இதில் ஒன்று. இந்த வாட்சின் விலை 38,750 ரூபாயில் துவங்கி, 46,500 ரூபாய் வரை ஆகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us