உள்ளடக்கத்திற்கு செல்ல

குறட்டை, இருமலை கண்காணிக்க தயாராகும் 'கூகுள்' ஸ்மார்ட்போன்
குறட்டை, இருமலை கண்காணிக்க தயாராகும் 'கூகுள்' ஸ்மார்ட்போன்
PUBLISHED ON : ஜூன் 05, 2022

அ நிறம் | அளவு
'கூகுள்' நிறுவனம், 'பிக்ஸல் மற்றும் ஆண்ட்ராய்டு' போன் வாயிலாக, குறட்டை மற்றும் இருமல் ஆகியவற்றை கண்காணித்து அறியும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம், தற்போது அதன் முழு நேர ஊழியர்களிடம் மட்டும், அவர்களின் துாக்க சப்தத்தை சேகரித்து ஆராயும் பணியை மேற்கொண்டு வருகிறது.
கூகுளின் இந்த வசதியை பயன்படுத்தி, நம் குறட்டை மற்றும் இருமல் குறித்த துல்லியமான தரவுகளை பெற்று, அப்பிரச்னையை மருத்துவ ரீதியாக விரைவாக தீர்த்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
