உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 29, 2022

அ நிறம் | அளவு
பல நிறுவனங்கள் மடித்து நீட்டக்கூடிய வகையிலான 'போல்டபிள்' ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், 'கூகுள்' நிறுவனம், இன்னும் போல்டபிள் போனை அறிமுகம் செய்யவில்லை.
ஆனால் இந்நிறுவனம், போல்டபிள் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக, கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், 'கூகுள் பிக்ஸல் போல்டு' ஸ்மார்ட்போன் அறிமுகம் இந்த ஆண்டில் இருக்காது எனவும், கூகுள் இந்த போனின் அறிமுகத்தை தள்ளிவைத்திருப்பதாகவும் செய்திகள் வரத் துவங்கி உள்ளன.
கூகுள் பிக்ஸல் போல்டு போனின் தற்போதைய தயாரிப்பில் நிறுவனத்துக்கு திருப்தி இல்லை என்றும், மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் பின்னரே சந்தைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
