உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 24, 2020

அ நிறம் | அளவு
கூகுள் நிறுவனத்தின் வீடியோ அழைப்புகளுக்கான, 'கூகுள் மீட்' சிறப்பான வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது இருக்கும் அதன் வீடியோ அழைப்புக்கான இன்னொரு செயலியான, 'கூகுள் டுவோ' செயலியை நீக்கவிட முயற்சிப்பதாக தெரிகிறது.இதன் மூலம், தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்காக ஒரே ஒரு வீடியோ செயலியை மட்டுமே வைத்துக்கொள்வது குறித்த யோசனையில் இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.மேலும், இந்த, 'கூகுள் டுவோ' மற்றும், 'கூகுள் மீட்' ஆகிய இரண்டையும் இணைத்து, 'கூகுள் டூயட்' என பெயரிடுவது என்பது குறித்த ஆலோசனையும் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.நல்லாதான் யோசிக்கிறாங்க!
