உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 06, 2022

அ நிறம் | அளவு
'நத்திங்' நிறுவனத்திலிருந்து புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகலாம் என, சந்தையில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரபல 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்ல் பை, அந்நிறுவனத்திலிருந்து விலகி, லண்டனில், நத்திங் எனும் புதிய நிறுவனத்தை துவங்க்கினார்.
இந்நிறுவனத்திலிருந்து முதன் முதலாக, 'நத்திங் ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்' அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, இப்போது அதன் அடுத்த தயாரிப்பை அறிமுகம் செய்ய ரெடியாகி வருகிறது.
இந்நிலையில், அண்மையில், குவால்காம் ஸ்நாப்டிராகன் பிராசசருடன், ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கி உள்ளதாக கார்ல் பை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, புதிய அறிமுகம் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் அதிகரித்துள்ளது.
