PUBLISHED ON : செப் 18, 2020

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், 'எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்' நவம்பர், 10ம் தேதியன்று அறிமுகம் செய்யப்படும் என, மைக்ரோசாப்ட் உறுதி செய்துள்ளது.இந்த, 'எக்ஸ்பாக்ஸ் சீரீஸ் எஸ்' இதுவரை வந்தவற்றில், அளவில் மிகவும் சிறியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 'எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ்'ஐ விட, 60 சதவீதம் அளவுக்கு சிறியதாக இருக்கும் என்கிறார்கள்.
இந்த புதிய கன்சோல், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன், அதன் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றில் பெருத்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சேமிப்பு திறன், 512 ஜி.பி., தான் இருக்கும் என்கிறார்கள். இப்போது வரும் பெரும்பாலான விளையாட்டுகள், 100 ஜி.பி., வரை எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், 512 ஜி.பி., என்பது போதுமானதாக இருக்காது. வேறு மாற்றுவழிகள் என்ன என்பது, இனிதான் தெரியவரும். எதிர்பார்க்கப்படும் விலை: 22,000 ரூபாய்.
