உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 20, 2021

அ நிறம் | அளவு
'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில் அதன், 'சாம்சங் கேலக்ஸி ஏ 12' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரியில் இதே பெயரில் போனை மாற்றியமைத்து, தற்போது அறிமுகம் செய்துள்ளது. இரண்டுக்கும் இடையேயான ஒரே ஒரு வித்தியாசம், இந்த புதிய போனில் அதனுடைய சொந்த பிராசஸரை பயன்படுத்தி உள்ளது என்பது தான். இதே போன், கடந்த வாரம் ரஷ்யாவில், 'கேலக்ஸி ஏ 12 நாட்ச்' எனும் பெயரில் அறிமுகம் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்கள்:
இரண்டு சிம்
6.5 அங்குல எச்.டி., திரை
நான்கு கேமரா செட் அப்
48 மெகா பிக்ஸல் கேமரா
யு.எஸ்.பி., டைப் சி
15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை:
4 ஜி.பி.,x 64 ஜி.பி., 13,999 ரூபாய்
6 ஜி.பி.,x 128 ஜி.பி., 16,499 ரூபாய்
