PUBLISHED ON : ஆக 19, 2021

இந்தியாவில், பியூச்சர் போன்களுக்கான தேவை எப்போதும் உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இத்தகைய போன்களுக்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது.'நோக்கியா, லாவா, ஐடெல், ரிலையன்ஸ் ஜியோ' போன்ற பல நிறுவனங்கள், பியூச்சர் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.இந்த வகையில் தற்போது, 'பிலிப்ஸ்' பிராண்டு உரிமம் பெற்ற, 'டி.வி.பி., டெக்னாலஜி' நிறுவனம், இந்தியாவில் மூன்று பியூச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்கள், 'இ' வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 'பிலிப்ஸ் ஜெனியம் இ 209, பிலிப்ஸ் ஜெனியம் இ 125, பிலிப்ஸ் இ 102 ஏ' என மூன்று போன்கள் அறிமுகம் ஆகியுள்ளன.
பிலிப்ஸ் ஜெனியம் இ 209
2.4 அங்குல திரை
1,000 எம்.ஏ.எச்., பேட்டரி
புளுடூத் 3.0
டார்ச்
விலை: 2,999 ரூபாய்
பிலிப்ஸ் ஜெனியம் இ 125
1.77 அங்குல திரை
2,000 எம்.ஏ.எச்., பேட்டரி
மியூசிக் பிளேயர்
இரண்டு சிம்
விலை: 2009 ரூபாய்
பிலிப்ஸ் இ 102 ஏ
1.77 அங்குல திரை
1,000 எம்.ஏ.எச்., பேட்டரி
புளுடூத் 2.1
இரண்டு சிம்
கேம் வசதி
மியூசிக் பிளேயர்
விலை: 1,399 ரூபாய்
