உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 27, 2020

அ நிறம் | அளவு
சமூக ஊடக பிரபல செயலியான,'டெலிகிராம்', அடுத்த ஆண்டிலிருந்து, சிறப்பு பயனர்களுக்கு பணம் செலுத்தி பெறக் கூடிய, சேவைகளை அறிமுகம் செய்ய இருக்கிறது.மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் மற்றும், வணிக நோக்கங்களுக்காக, டெலிகிராமை பயன்படுத்துபவர்களுக்காக, இந்த சிறப்பு சேவை வழங்கப்பட இருக்கிறது.டெலிகிராம், பல நாடுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த, 2013ல் அறிமுகம் ஆன இந்த செயலியை, கிட்டத்தட்ட, 50 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், புதிய சேவைகளை புத்தாண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
