உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 28, 2020

அ நிறம் | அளவு
மொபைல் போன் நிறுவனங்கள், அடுத்து என்ன போனை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கிறது என்பதை அறிந்து சொல்வதற்காக, பலர் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் தரும் தகவலின்படி, சாம்சங் நிறுவனம், 'கேலக்ஸி ஏ 72' ஸ்மார்ட்போனை வெளியிடுவதில் தீவிரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த போன், 4ஜி மற்றும், 5ஜி சேவைகளுக்கு ஏற்றவாறு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் கேமரா, 64 எம்.பி., 8.ஜி.பி., ரேம் திறன் கொண்டதாக இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதன் திரை, 6.7 அங்குலத்துடன் இருக்கும் என்றும், 'ஸ்நாப்டிராகன், 720 ஜி., எஸ்.ஓ.சி.,' பிராசஸருடன் வர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விலை இன்னும் கணிக்கப்படவில்லை.
