PUBLISHED ON : மார் 20, 2022

அவ்வளவு எளிதில் தொலைந்து போகாத மூன்று இயர்பட்சுகளை, எல்.ஜி., நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'எல்.ஜி.டோன் ப்ரீ எப்.பி., 9, டோன் ப்ரீ எப்.பி., 3, டோன் ப்ரீ எப்.பி., 5 ' என மூன்று 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்பட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இயர்பட்சுகள், நீளம் குறைந்த தண்டுகளுடனும், வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் வகையிலான, 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியுடனும் வந்துள்ளன. மேலும், அல்ட்ரா வயலட் லைட்டுடன் கூடிய, 'யு.வி., நானோ சார்ஜிங்' கேஸ் உள்ளது.
அல்ட்ரா வயலட் லைட் இருப்பதால், இயர்பட்சில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு விடும். கறுப்பு மற்றும் வெள்ளை என இரு நிறங்களில் வந்துள்ளன. இயர்பட்ஸ் எங்காவது தொலைந்துவிட்டால், செயலி வாயிலாக எளிதாக இருக்குமிடத்தை அறியலாம்.
இவற்றின் விலை: 13,990 ரூபாயிலிருந்து துவங்குகிறது. எந்த மாடல், என்ன விலை என்பது குறித்த தெளிவான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
