PUBLISHED ON : ஆக 15, 2021

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 'சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3' மற்றும் 'சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3' போன்கள், கடந்த புதன்கிழமையன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 'கேலக்ஸி இசட் போல்டு 2' மற்றும், 'கேலக்ஸி இசட் பிளிப்' ஆகிய போன்கள் வரிசையில், அடுத்ததாக இந்த இரு போன்களும் அறிமுகம் ஆகியுள்ளன.
இந்த இரண்டு போன்களுமே, மடக்கி கொள்ளும் வகையிலான, 'போல்டபிள்' போன்களாகும். இந்த புதிய போன்கள் நீடித்து உழைக்கும் வகையில் வந்துள்ளன. இவற்றின் திரை, இதற்கு முந்தைய போன்களின் திரையை விட, 80 சதவீதம் கூடுதலாக உழைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன், 'எஸ்.பென்' சப்போர்ட் உடன் வந்துள்ளது. போல்டபிள் வரிசையில், எஸ்.பென் சப்போர்ட் செய்யும் வகையில் வந்திருக்கும் முதல் போன் இது தான்.
வரும் 27ம் தேதி முதல், இந்த இரண்டு போன்களும், அமெரிக்கா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் விற்பனைக்கு வருகின்றன. இந்தியாவில் எப்போது கிடைக்கும், என்ன விலை என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்க சந்தையில் விலை:
சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 போனின் விலை 1.34 லட்சம் ரூபாயிலிருந்து துவங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3 போனின் விலை 74 ஆயிரம் ரூபாயிலிருந்து துவங்குகிறது.
