உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 16, 2022

அ நிறம் | அளவு
வி.யு., நிறுவனம், அதன் பிரீமியம் மாடல் டிவியை அறிமுகம் செய்துள்ளது. வி.யு., 75 க்யூ.எல்.இ.டி., எனும் பிரீமியம் டிவி அறிமுகம் ஆகியுள்ளது. இந்த டிவி, 75 அங்குல 4கே எச்.டி.ஆர்., க்யூ.எல்.இ.டி., திரையுடன் வந்துள்ளது. டால்பி விஷன், எச்.டி.ஆர்.,10 மற்றும் எச்.எல்.ஜி., தொழில்நுட்பங்களை சப்போர்ட் செய்யும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடியோவை பொறுத்தவரை, நான்கு ஸ்பீக்கர்களுடன், 40 வாட் அவுட் புட் கொண்டதாகவும் உள்ளது.
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும் இந்த டிவி, 2ஜி.பி.,ரேம், 16 ஜி.பி., சேமிப்பகம் கொண்டிருக்கிறது.
விலை: 1,19,999 ரூபாய்
