உள்ளடக்கத்திற்கு செல்ல

'புளூடூத் காலிங்' வசதியுடன் பட்ஜெட் விலையில் வாட்ச்
'புளூடூத் காலிங்' வசதியுடன் பட்ஜெட் விலையில் வாட்ச்
PUBLISHED ON : ஆக 07, 2022

அ நிறம் | அளவு
பட்ஜெட் விலையில், 'புளுடூத் காலிங்' வசதியுடன் கூடிய, 'பெப்பிள் ஓரியான்' மற்றும் 'ஸ்பெக்ட்ரா' ஸ்மார்ட் வாட்சுகள் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளன. இந்த ஸ்மார்ட் வாட்சுகளில், புளுடூத் காலிங் வசதி இருப்பதால், தொலைபேசி அழைப்புகளை மணிக்கட்டிலிருந்தே நேரடியாக ஏற்கலாம் அல்லது புறக்கணிக்கலாம்.
பெப்பிள் ஓரியான் 1.81 அங்குல முழு எச்.டி., டிஸ்ப்ளேவும்; பெப்பிள் ஸ்பெக்ட்ரா 1.36 அங்குல அமோல்டு டிஸ்ப்ளேவும் கொண்டு உள்ளன. இரண்டிலும், 'வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட்' உள்ளது. மேலும் இரண்டும் 'ஐ.பி., 67' நீர்புகா சான்றிதழ் பெற்று உள்ளன.
'ஆட்டோ ஸ்பீக்கர் கிளினர்' வசதி இருப்பதால், குரலை தெளிவாக கேட்க முடியும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 10 நாட்கள் பயன்படுத்தலாம்.
விலை
பெப்பிள் ஓரியான்: 3,499 ரூபாய்.
பெப்பிள் ஸ்பெக்ட்ரா: 5,499 ரூபாய்.
