உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 11, 2022

அ நிறம் | அளவு
இந்திய சந்தையில் 'பெப்பிள் ப்ரோஸ்ட்' எனும் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.
பிரபல 'பெப்பிள்' நிறுவனம், இந்த ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்து உள்ளது.
விலை உயர்ந்த ஆப்பிள் வாட்சுக்கும், இந்த வாட்சுக்கும் இடையே, வடிவமைப்பில் துவங்கி, பல ஒற்றுமைகள் உள்ளன. இருப்பினும், மிகவும் விலை மலிவாக வந்துள்ளது.
'நாய்ஸ், பயர்போல்ட், போட்' ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்சுகளுக்கு போட்டியாக, இந்த வாட்ச் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
1.87 அங்குல ஐ.பி.எஸ்., டச் ஸ்கிரீன்
புளூடூத் காலிங் வசதி
துாசி, நீர்புகாமலிருக்க ஐ.பி.67 தரச்சான்று
ஆரோக்கிய கண்காணிப்பு
100 வகையான முக வடிவமைப்பு
காலண்டர், கால்குலேட்டர் வசதிகள்
நான்கு வண்ணங்கள்
விலை: 1,999 ரூபாய்.
