
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாம்சங் நிறுவனத்தின், 'கேலக்ஸி போல்டு' போனுக்கு போட்டியாக, மடக்கக்கூடிய வகையில், சீனாவின், வாவேய் நிறுவனமும், 'மேட் எக்ஸ் போல்டபிள்' போனை அறிமுகம் செய்துள்ளது.
பார்ப்பதற்கு, மேட் எக்ஸ் போன், நார்மல் போன் போல இருந்தாலும், விரித்தால், 8 இஞ்ச் டேப்லெட் போல இருக்கிறது.
மெயின் டிஸ்பிளே, 6.6 இஞ்ச் ஆகவும், பின்புற டிஸ்பிளே, 6.4 இஞ்ச் ஆகவும் உள்ளது. விரித்தால், 8 இஞ்ச் பேனலாக மாறுகிறது. 5.4 மில்லி மீட்டர் தடிமனுடன் மிகவும் மெலிதாக உள்ளது. மடிக்கப்பட்ட நிலையில், 11 மில்லி மீட்டர் தடிமன். ஆனால், கேலக்ஸி போல்டில், 17 மில்லி மீட்டராக இருக்கிறது. அரை மணி நேரத்தில், 85 சதவீதம் சார்ஜ் ஏறிவிடுகிறது.
விலை? நிச்சயமாக அதிகமாகத்தான் இருக்கும்! 1 லட்சத்து, 86 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இருக்கும் என்று கருதப்படுகிறது.

