தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/தொழில் முனைவோர் படிக்க வேண்டிய பயனுள்ள புத்தகம்

தொழில் முனைவோர் படிக்க வேண்டிய பயனுள்ள புத்தகம்

தொழில் முனைவோர் படிக்க வேண்டிய பயனுள்ள புத்தகம்


UPDATED : அக் 11, 2026 08:22 AM

ADDED : அக் 10, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 08:22 AM ADDED : அக் 10, 2026 04:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெ.இறையன்பு எழுதிய, 'இலக்கியத்தில் மேலாண்மை' என்ற புத்தகம் குறித்து, வரி ஆலோசகர் பெருமாள் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

என் வாசிப்பு அனுபவத்தில் தமிழில் வெளி வந்துள்ள நல்ல பயனுள்ள புத்தகங்களில் இந்த புத்தகம் முக்கியமானது. தொழில் சார்ந்த சிந்திக்கும் இளந்தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு, இந்நுால் சிறந்த கையேடு.

முதலில் எந்த முடிவை, எந்த நேரத்தில் எடுக்கவேண்டும், என்பதில்தான் நிர்வாகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை நமது பண்டைய இலக்கியங்களில் இருந்தும், மேலை நாட்டு இலக்கியங்களில் இருந்தும் நுாலாசிரியர் தெளிவாக உதாரணங்களை கொண்டு விளக்கி இருக்கிறார்.

முன்பெல்லாம் பணியாளர்களுக்கு முன் அனுபவம் அவசியம் தேவைப்பட்டது. இன்று தேவையில்லை என்ற கோட்பாட்டை நிர்வாகம் ஏன் கடைபிடிக்கிறது என்பதற்கான விளக்கம் இந்நுாலில் தரப்பட்டுள்ளது. அதனால் படிப்பை முடித்து விட்டு வரும் பட்டதாரி இளைஞர்கள் உடனடி வேலை வாய்ப்பு பெறுவது இதில் பெருமையாக சொல்லப்பட்டுள்ளது.

தொழிலதிபர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கி இளைப்பாற வேண்டும். இயற்கை எழில் சார்ந்த இடங்களை சுற்றி பார்த்து மனம் மகிழவேண்டும். இதனை செய்தால் தான் தொழில் வளர்ச்சி பெறும்; மேலும் புதிய புதிய சிந்தனைகளை பெற முடியும் என்கிறார் நுாலாசிரியர்.

தொழிலாளர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து நல்ல வழிமுறைகள் இந்த நுாலில் உள்ளன. ஒரு நல்ல நிர்வாகத்தில் நிர்வாகிகள் தவிர்க்க வேண்டிய முக்கியமானது கோபம் என்கிறார்.

அதே நேரத்தில் தடங்கல்களையும், எதிர்பாரா நிகழ்வுகளையும் திறமையாக கையாள்வது தான் நல்ல நிர்வாக திறனை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும் என்கிறார்.

எதை தொடங்கினாலும் அதன் முடிவை அறியாமல் செய்யாதீர்கள் என்கிறார். ஒரு தொழில் சிறப்பாக இருக்க கற்பனை திறன் அவசியம். அது வளர வேண்டும் என்றால் தொழில் முனைவோர் இலக்கிய நுால்களை படிக்க வேண்டும்.

கற்பனை திறன் நிச்சயமாக வெற்றிக்கு கைகொடுக்கும் என, பல நல்ல கருத்துக்கள் இந்த நுாலில் உள்ளன.

வெற்றி பெற்ற தொழில் முனைவோர் பட்டியலில், தங்கள் பெயர் இடம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் இந்த நுாலை படிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us