தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/குழந்தைகள் உள்ளத்தில் ஒளிரும் காட்சிகளை படம் பிடிக்க முடியுமா?

குழந்தைகள் உள்ளத்தில் ஒளிரும் காட்சிகளை படம் பிடிக்க முடியுமா?

குழந்தைகள் உள்ளத்தில் ஒளிரும் காட்சிகளை படம் பிடிக்க முடியுமா?


UPDATED : ஜூலை 19, 2026 08:33 AM

ADDED : ஜூலை 18, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 08:33 AM ADDED : ஜூலை 18, 2026 04:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி எழுதிய 'சினிமாவின் ஆன்மா' என்ற நுால் குறித்து, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தனது வாசிப்பு அனுவங்களை பகிர்ந்து கொண்டார்.மேலை நாடுகளில் அச்சிடப்படும் குழந்தைகளுக்கான நுால்களில் அவை எந்த வயதுக்குரியவை என்று தவறாமல் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் குறிப்பிடுகின்றனர். அதே போல திரைப்படங்களில் குழந்தைகள் நல்ல ரசனையை பெறவும், திரைப்படத்தில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படவும் திரைப்படங்களை பகுத்து சொல்வதில் இயக்குனர்கள், திரைப்பட ஆய்வாளர்கள் அதிக அக்கறை கொள்ளவில்லை.

ஆனால் இந்த நுாலில் சிறுவர்கள் எந்த வயதினர் எந்த வகைப் படங்களை பார்க்கலாம் என்று பட்டியலிட்டு அந்த படங்களின் சிறப்புகளை தொழில்நுட்ப அடிப்டையிலும், கதையம்சம் அடிப்படையிலும் ரசனை பூர்வமா சொல்லியிருக்கிறார் சீனு ராமசாமி.

உலகத் தரமான படங்களை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அறிந்துன் கொள்வதற்கான ஒரு கையேடாக இந்த புத்தகம் உள்ளது. திரைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும், திரையிடப்படும் முறைகள் என்ன என்று விளக்குகிறார். திரைப்படம் சார்ந்த ஒரு முறையான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

புத்தகமாக வாசிப்பதற்கும், அதை காட்சியாக பார்ப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆனால் பலருக்கு இந்த வேறுபாடு புரிவது இல்லை. அதை சிறுவயதில் இருந்து பழக்கப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை இந்த புத்தகம் உருவாக்குகிறது.

குழந்தைகள் உலகம் தனித்துவமானது. அவர்கள் உள்ளதில் ஒளிரும் அபூர்மான காட்சிகளை உணர்ந்து எந்த இயக்குனரும் ஒளிப்பதிவு செய்துவிட முடியாது. அந்த உலகத்தில் பெரியவர்கள் குறுக்கிடவும் தேவையில்லை. அந்த உலகத்தில் குழந்தைகள் அவர்களை புரிந்து கொள்ள திரைப்படங்கள் உதவும் என்பதை, இந்த புத்தகம் வாயிலாக சீனு ராமசாமி நமக்கு உணர்த்துகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us