sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

 பிரமிடில் புதையல் கனவு தேடிச்சென்றவருக்கு கிடைத்ததா?

/

 பிரமிடில் புதையல் கனவு தேடிச்சென்றவருக்கு கிடைத்ததா?

 பிரமிடில் புதையல் கனவு தேடிச்சென்றவருக்கு கிடைத்ததா?

 பிரமிடில் புதையல் கனவு தேடிச்சென்றவருக்கு கிடைத்ததா?


ADDED : மார் 22, 2026 07:53 AM

Google News

ADDED : மார் 22, 2026 07:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் பாலோ கொயலோ எழுதிய ரசவாதி நாவல் குறித்து சொல்கிறார் கவிஞர் அய்யப்ப மாதவன். கனவுகளை துரத்துதல் என்பது ஒவ்வொரு மனிதனின் லட்சியமாக இருக்க வேண்டும்.

எப்போது மரணிப்போம் என்று அறிய முடியாத வாழ்க்கையில் நாம் வாழ்ந்ததற்கான சில அடையாளங்களை உருவாக்க வேண்டும், என்ற லட்சியத்தை பாலோ கொயலோவின் 'ரசவாதி' நாவல் உணர்த்துகிறது.

ஆடு மேய்த்து வாழ்வை கழித்துக்கொண்டிருக்கும் சாண்டியாகோ, எகிப்து பிரமிடில் புதையல் இருக்கும் ரகசியத்தை கனவில் காண்கிறான்.

ஆட்டு மந்தையை விற்றுவிட்டு எகிப்து நோக்கி பயணம் தொடங்குகிறான். பயணத்தில் பல அனுபவங்கள் கிடைக்கின்றன. அவை அவன் நினைத்தே பார்க்காதவை.

கனவை கனவென்று நினைக்காமல் அதுதான் வாழ்க்கையென நினைத்து, வாழ்வாதாரத்தை துறந்துவிட்டு துணிச்சலுடன் கரடு முரடான பாதைகளில், துயர்களை கடந்து பயணம் செய்கிறான். புதையல் கிடைத்ததா? கனவு கண்டபடி செல்வந்தனாக மாறினானா? என்ற கேள்விகளுக்கு பதிலே இந்த நாவல்.

படித்த பிறகு நமக்குள் நம்பிக்கை பிறக்கிறது. பலரின் வாழ்வில் இந்த நுால் மாற்றத்தை உருவாக்கியதாக சொல்கின்றனர்.

உலகம் முழுவதும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. படித்தவர்கள் மற்றவர்களை படிக்க சொல்கின்றனர். அதுவே பாலோ கொயலோவின் வெற்றி.

முதலில் நீங்கள் கனவு காணும் மனிதனாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் லட்சியம் எதுவென்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

பிறகு அதை நோக்கிய உங்கள் பயணத்தை தொடர வேண்டும். எத்தனை இடர்கள் வந்தாலும் மன உறுதியுடன் கடந்து வெற்றியை அடைய வேண்டும். இதுதான் இந்த நாவலின் செய்தி.

சாண்டியாகோவின் பயணத்தில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து மாயாஜாலம் நிகழ்கிறது. வாழ்க்கையின் அர்த்தங்கள் விரிகின்றன. கனவில் கண்டதை விட, கண் முன்னே தோன்றும் அதிசயங்கள் அவனை வியக்க வைக்கிறது.

நம்மையும் தான். படிக்க வேண்டிய புத்தகம்.






      Dinamalar
      Follow us