/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
விலங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்! கெஞ்சுகிறார் கானுயிர் புகைப்பட கலைஞர் சுந்தரராமன்
/
விலங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்! கெஞ்சுகிறார் கானுயிர் புகைப்பட கலைஞர் சுந்தரராமன்
விலங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்! கெஞ்சுகிறார் கானுயிர் புகைப்பட கலைஞர் சுந்தரராமன்
விலங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்! கெஞ்சுகிறார் கானுயிர் புகைப்பட கலைஞர் சுந்தரராமன்
ADDED : ஆக 02, 2025 11:38 PM

கடந்த, 15 ஆண்டுகளாக கானுயிர் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறார், சுந்தரராமன். சுற்றுச்சூழல் ஆர்வலர், கானுயிர் ஆர்வலரான இவரது புகைப்பட அனுபவங்கள், நம்மை சிந்திக்க வைக்கின்றன.
நீங்கள் புகைப்பட கலைஞரானது எப்படி? ''துவக்கத்தில் சாதாரண புகைப்படங்கள் மட்டுமே எடுத்து வந்தேன். ஒரு முறை பறவை ஒன்று மரத்தில் இருந்தது. அதை புகைப்படம் எடுக்க முயற்சித்தேன். அது சாதாரண பறவை தான். ஆனால், அதை புகைப்படம் எடுக்க, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய இருந்தது.
அந்த காத்திருப்புதான், என்னை கானுயிர் புகைப்பட கலைஞராக மாற்றியது. கடந்த, 12 ஆண்டுகளாக கானுயிர் புகைப்படங்கள் எடுத்து வருகிறேன். பல்வேறு வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளேன்,''
மறக்க முடியாத படம் ஏதாவது உண்டா? ''ஒரு நாளில் ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கும் வரித்தலை வாத்து, வால்பாறையில் இருவாச்சி பறவை புகைப்படம், பிளாக் பக் மான் ஆகியவற்றை புகைப்படம் எடுத்தது மறக்க முடியாத ஒன்று.
ஒரு முறை, மசினக்குடி பகுதியில், பாலம் ஒன்றின் அருகில், குரங்கு ஒன்று குட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தது. அதைப்பார்த்ததும் புகைப்படம் எடுக்க முயற்சித்து அருகில் சென்றோன்.
குட்டியை பார்த்த போது இதயம் ஒரு நொடி நின்று விட்டது. குட்டியின் மூக்கு, வாய், காது ஆகியவற்றில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. அவ்வழியாக வாகனங்களில் செல்வோர், போடும் உணவுக்காக ரோட்டை கடக்கும் போது, வாகனத்தில் அடிப்பட்டு அக்குட்டி இறந்துள்ளது. இது தெரியாமல், இறந்த குட்டியை துாக்கிக் கொண்டு தாய் சுற்றியுள்ளது,''.
விலங்குகளின் உணவுமுறை மாறுகிறதா? ''வனவிலங்குகளுக்கு நாம் உணவு வழங்குவதால் அவற்றின் பழக்கம் மாறி, உணவுக்காக ரோட்டில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றன. அதேபோல், நாம் உட்கொள்ளும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ், முறுக்கு உள்ளிட்ட உணவுப்பொருட்களில் அதிக உப்பு உள்ளது.
இதை வனவிலங்குகளுக்கு கொடுப்பதால், அவற்றுக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. சமீபகாலமாக வனவிலங்குகளுக்கு பார்வை குறைபாடு, உறுப்பு வளர்ச்சி குறைதல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதைத்தவிர்க்க அவற்றுக்கு உணவு அளிப்பதை நிறுத்த வேண்டும்,''
ஏதாவது விருது கிடைத்துள்ளதா? ''இதுவரை பெரிதாக விருதுகள் வாங்கவில்லை. ஆத்ம திருப்திக்காக மட்டுமே புகைப்படங்கள் எடுக்கிறேன். சமீபத்தில் உலக ஈர நில தினத்தை முன்னிட்டு நடந்த தேசிய அளவிலான நிகழ்ச்சிக்காக வெளியான புத்தகத்தில், என்னுடைய புகைப்படம் கவர் போட்டோவாக வெளியாகியிருந்தது. அது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.
நாம் செய்யும் செயல்களால், சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அதை தடுக்க நாடு முழுவதும் சென்று பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த, இந்த இயற்கையை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். மனிதனால், காட்டை உருவாக்க முடியாது. பறவைகள், வனவிலங்குகளால் மட்டுமே காட்டை ஏற்படுத்த முடியும்,''
''சிப்ஸ், முறுக்கு உள்ளிட்ட உணவுப்பொருட்களில் அதிக உப்பு உள்ளது. இதை வனவிலங்குகளுக்கு கொடுப்பதால், அவற்றுக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. சமீபகாலமாக வனவிலங்குகளுக்கு பார்வை குறைபாடு, உறுப்பு வளர்ச்சி குறைதல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதைத்தவிர்க்க அவற்றுக்கு உணவு அளிப்பதை நிறுத்த வேண்டும்,''
''குட்டியை பார்த்த போது இதயம் ஒரு நொடி நின்று விட்டது. குட்டியின் மூக்கு, வாய், காது ஆகியவற்றில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. அவ்வழியாக வாகனங்களில் செல்வோர், போடும் உணவுக்காக ரோட்டை கடக்கும் போது, வாகனத்தில் அடிப்பட்டு அக்குட்டி இறந்துள்ளது. இது தெரியாமல், இறந்த குட்டியை துாக்கிக் கொண்டு தாய் சுற்றியுள்ளது,''