sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

உடலை உறுதியாக்கு! ஆணழகன் போட்டியில் அசத்தும் முகம்மது முஜாஹித்

/

உடலை உறுதியாக்கு! ஆணழகன் போட்டியில் அசத்தும் முகம்மது முஜாஹித்

உடலை உறுதியாக்கு! ஆணழகன் போட்டியில் அசத்தும் முகம்மது முஜாஹித்

உடலை உறுதியாக்கு! ஆணழகன் போட்டியில் அசத்தும் முகம்மது முஜாஹித்


ADDED : ஏப் 13, 2025 04:03 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உறுதியான உடல் உள்ளவர்கள் தான் கட்டுறுதியான காளையாக திகழ முடியும். பள்ளியில் படிக்கும் போதே உடல் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டு தன்னை முழு முயற்சியுடன் வருத்தியும், திருத்தியும் ஆணழகன் போட்டிகளுக்கு தயாராகி சாதனைகளை படைத்து வருகிறார் கல்லுாரி மாணவர் முகம்மது முஜாஹித்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த இவர், உடலை வருத்தி உன்னத பயிற்சி மேற்கொண்டு படிக்கும் கல்லுாரிக்கும், பிறந்த ஊருக்கும் பெருமை சேர்ப்பதில் மெனக்கெடுகிறார்.

பள்ளி, கல்லுாரி மாணவர்களை தடம்புரளச் செய்யும் போதை பழக்கத்திற்கு எதிராக, பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை வலியுறுத்தி, இளைஞர்களுக்கு உடல் மீது கட்டுறுதியான களங்கம் இல்லாத நிலையை கொண்டு வந்து ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமும், ஆலோசனையும் வழங்கி வருகிறார்.

என்னை பார்த்து பிற இளைஞர்களும் உடலின் மீது அக்கறை கொண்டு கவனம் செலுத்த முன் வரவேண்டும் என உடற்பயிற்சியில் ஈடுபட்டவாறே கூறுகிறார் முகம்மது முஜாஹித்....

சிறு வயதில் இருந்தே எனக்கு ஆணழகன் போட்டியில் பங்கேற்க ஆர்வம் மிகுந்திருந்தது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடந்த அமெச்சூர் ஆணழகன் போட்டியில் உயரமான பிரிவில் முதல் பரிசு பெற்றுள்ளேன். பாடி பில்டிங்கில் 65 கிலோ எடை பிரிவிலும் முதல் பரிசு பெற்றேன். ஓவர் ஆல் சேவிங் மஸ்குலர் மேன் பட்டம் பெற்றுள்ளேன்.

பாடி பில்டிங் போட்டியில் பங்கு பெற இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்து அவற்றில் வெற்றியும் பெற்று வருகிறேன்.

போட்டி அறிவிக்கப்படும் 7 மாதங்களுக்கு முன்பே உடலை தயார்படுத்த வேண்டும். காலை, மாலை நேரங்களில் முறையாக உடற்பயிற்சி செய்கிறேன்.

உணவு பழக்க வழக்கம்


புரோட்டின் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய்யில் பொறித்த உணவினை சாப்பிடக்கூடாது. அவித்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். போட்டிக்கு தயாராக 4 மாதங்களுக்குள் நன்றாக சைவ, அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள 2 மாதங்களில் கொழுப்பு மிகுந்த உணவை தவிர்க்க வேண்டும். கடைசி பத்து நாட்களுக்கு வெறும் புரதச்சத்து உள்ள உணவு மற்றும் பச்சைக் காய்கறிகள், உலர் பழங்கள் இவற்றை உட்கொள்ள வேண்டும்.

தண்ணீரை அளவாக குடிக்க வேண்டும். உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடல் தசைகள் இறுகி விடுவது தெரிந்துவிடும். போட்டிக்கு தயார்படுத்தும் நிலையில் வலுவேறிய, முறுக்கேறிய உடலில் 'டேன் கிரீஸ் ஆயில்' தடவ வேண்டும்.

இதனால் பார்க்கும் போது கவர்ச்சிகரமான உடல் அமைப்பை நடுவர்கள், பார்வையாளர்களிடம் காண்பிக்க இயலும். தற்போது இளைஞர்கள் இதுபோன்ற உடல் கட்டமைப்புக்கான முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. நான் படிக்கும் கல்லுாரி எனக்கு ஊக்கமளிக்கிறது. எனது சகோதரர் ஹபிபுல்லா வழிகாட்டுகிறார்.

என் அயராத முயற்சி, தளராத மனப்பான்மை கட்டுறுதியான உடல் அமைப்பு பெற்று இருப்பது பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முயற்சியாகவே கருதுகிறேன்.

இவரை வாழ்த்த... 75987 46582






      Dinamalar
      Follow us