sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

இது கதை அல்ல... வாழ்வு - எளிய மனிதர்களின் வாக்குமூலம் எழுதிய ஹேமா

/

இது கதை அல்ல... வாழ்வு - எளிய மனிதர்களின் வாக்குமூலம் எழுதிய ஹேமா

இது கதை அல்ல... வாழ்வு - எளிய மனிதர்களின் வாக்குமூலம் எழுதிய ஹேமா

இது கதை அல்ல... வாழ்வு - எளிய மனிதர்களின் வாக்குமூலம் எழுதிய ஹேமா


ADDED : மே 26, 2024 11:04 AM

Google News

ADDED : மே 26, 2024 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்மை காலங்களில் பெரிதும் கவனம் ஈர்க்கப்பட்ட பெண்ணிய எழுத்தாளர், பேச்சாளர், கவிதாயினி ஹேமலதா. சென்னையை சேர்ந்த இவர் ஹேமா என்ற பெயரில் எழுதுகிறார். தற்போது கேரளத்தின் கொச்சியில் வசிக்கிறார். சென்னையிலும் துபாயிலும் கொச்சியிலும் சில பன்னாட்டு நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் பணியாற்றியிருக்கிறார். 'முழுவல்' என்ற பெயரில் இவரது முதல் கவிதை தொகுப்பு வெளியானது. பின்னர் வெளிவந்த 'கதையல்ல வாழ்வு - எளிய மனிதர்களின் வாக்குமூலம்' என்ற நுால் எளிய மனிதர்களின் வாழ்வு போராட்டம் பற்றியது. பெரும் வரவேற்பை பெற்றது இந்த நுால்.

பெண்ணியக்கட்டுரை தொகுப்பான 'பாதைகள் உனது பயணங்கள் உனது' பெண்களின் தன்னம்பிக்கை குரலாக ஒலித்தது. இந்த இளம் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்...

* கதை அல்ல வாழ்வு நுாலின் கதை மாந்தர்களை எப்படி கண்டுபிடித்தீர்கள்? அவர்களின் வாழ்வை அடையாளப்படுத்திய போது என்ன உணர்ந்தீர்கள்?


எழுத்து தன்னைத்தானே எழுதிக் கொள்ளும் என்று சிலர் கூறியதை முன்பு நான் நம்பியதில்லை. ஆனால் கதையல்ல வாழ்வு என்னைக் கொண்டு தன்னைத்தானே எழுதிக் கொண்டது. முதலில் எளிய மனிதர்களாக என் மனதில் நினைத்தவர்களை பட்டியல் தயாரித்தேன். கட்டட வேலை செய்பவர்கள், சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், கண் பார்வையற்றவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், ஆதரவற்ற பெற்றோர்கள் என பட்டியல் நீண்டது. அவர்களை சந்தித்து உரையாடினேன். அவர்கள் வாழ்க்கையின் பாடுகளை, ஏற்ற இறக்கங்களை பகிர்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு கட்டுரை எழுதி முடிக்கும்போதும் மனம் கனமாவதை உணர்ந்திருக்கிறேன்.

* புத்தக படிப்பு அனுபவம் பள்ளி பருவத்தில் துவங்கியதா. உங்களை மாற்றிய நுால் எது?


வாசிப்பும் எழுத்தும் பள்ளிப் பருவத்தில் தொடங்கியது. 4ம் வகுப்பு படிக்கும்போது கவிதை என்று எதையோ எழுத ஆரம்பித்தேன். சேலம் செல்லையா என்ற கவிஞர் எனக்கு எழுதிக் கொடுப்பார். அதை பேச்சுப் போட்டிகளில் பேசுவேன். ஐந்தாம் வகுப்பில் புத்தகங்கள் துணையுடன் உரை தயாரித்து பேச்சுப் போட்டியில் பேசினேன். அதில் வாங்கிய பரிசு உற்சாகமடைய வைத்தது.

எங்கள் குடும்பப் பின்னணியில் மிகவும் படித்தவர்கள் யாருமில்லை. மூன்று பெண்பிள்ளைகளைக் கொண்ட வீடு எங்களுடையது. நான்தான் கடைக்குட்டி. நான் படிப்பாளி இல்லை. அதே சமயத்தில் மக்குமில்லை. பாடப் புத்தகங்களை விட மற்ற புத்தகங்களை ஆவலுடன் வாசித்தேன். விவேகானந்தர், சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சர் என்றுதான் என் வாசிப்பு தொடங்கியது. மனம், அறிவியல், யோகா குறித்து வாசிக்கத் தொடங்கினேன். அங்கிருந்து கவிதைகள், சிறுகதைகள், நாவல் என்று தொடர்ந்தது.

சேப்பியன்ல், வால்கா முதல் கங்கை வரை, ஆதி இந்தியர்கள், பெரியார் களஞ்சியம் போன்றவை எனக்குள் பெரிய திறப்பாக அமைந்த புத்தகங்கள் எனலாம்.

* அண்மையில் உங்களை கவர்ந்த நுால்? ஏன் எவ்வாறு?


தொ. பரமசிவன் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அள்ள அள்ள குறையாத அமிர்தம் அவர் எழுத்துகள். மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வு நுால்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நிவேதிதா லூயிஸின் கிறிஸ்தவத்தில் ஜாதி நுாலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

அம்பேத்கர், பாரதிதாசன், அண்ணாத்துரை, ஈ.வெ.ரா. எழுத்துகளில் தொடங்கி எழுத்தாளர்கள் பாமா, மயிலன் சின்னப்பன், முத்து கிருஷ்ணன், சென் பாலன், அ.மார்க்ஸ், கவிஞர் சுகிர்தராணி என எனக்கு பிடித்த எழுத்தாளர் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

* இன்றைய தமிழ் எழுத்துலகில் பெண்கள் நிலை? பெண் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா?


எழுத்தாளர்களை எழுத்தாளர் என்று மட்டுமே அழைக்க வேண்டும். அதில் ஆண், பெண் எழுத்தாளர்கள் என்ற எந்த பேதமும் இல்லை. பெண்கள் எழுத வரும்போது கேலி, கிண்டல்களுக்கு ஆளாகிறார்கள். அதையெல்லாம் அடித்து உடைத்து சாதனை படைத்த பல எழுத்தாளுமைகள் நம்மிடம் உள்ளனர். குடும்பம் என்ற அமைப்பைத் தாண்டி துறை சார்ந்து இயங்க பெண் வரும்போது பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கப்படுகிறாள். இலக்கியத் துறையிலும் பெண்களுக்கு அத்தகைய சவால்உண்டு. மெல்ல மெல்ல இச்சமூகத்தில் பெண்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்.






      Dinamalar
      Follow us