sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆப்பிரிக்கா

/

செய்திகள்

/

51 வது உலகத் தமிழ் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக அதியமான் கார்த்திக்

/

51 வது உலகத் தமிழ் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக அதியமான் கார்த்திக்

51 வது உலகத் தமிழ் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக அதியமான் கார்த்திக்

51 வது உலகத் தமிழ் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக அதியமான் கார்த்திக்


ஜூன் 24, 2024

Google News

ஜூன் 24, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2025-இல் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நகரில் நடக்க இருக்கும் 51வது ஆண்டு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடத்தின் நிறுவனர் அதியமான் கார்த்திக் ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 50 வது பொன்விழா மாநாடு ஜூன் 14-15 தேதிகளில் இலங்கை நாட்டின் யாழ் மாவட்டத்தில் நடைபெற்றது. இது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் நடத்தப்படும் 17 வது சர்வதேச மாநாடு ஆகும். முதலாம் நாள் அமர்வானது யாழிலுள்ள திவ்ய மஹாலில் மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணி வரை இடம்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து, மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுக்கான பொன் விழா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. விழாவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க துணைத்தலைவர் அ.பகீரதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர், விஐடி பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர். ஜி விஸ்வநாதன், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இரா. வேல்ராஜ், VGP உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி சந்தோஷம், வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன், முனைவர் சேயோன், சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வி. ஆர். எஸ் சம்பத் பங்கேற்றனர்.

உலகத் தமிழ் மாநாட்டின் சிறப்புத் தலைவர் மற்றும் புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் தொடக்கவுரை நிகழ்த்தினார், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆலோசகர் மாவை. சோ. தங்கராசா வாழ்த்துரை வழங்கினார். இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா, ரியூனியன், ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளில் இருந்து 87 பேராளர்களும் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்களும் பங்கேற்றனர்.


மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அடுத்த மாநாட்டினை 2025-இல் கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நகரில் நடத்துவது எனவும் 51வது ஆண்டு பன்னாட்டு மாநாடு எனும் பெயரில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடத்தின் நிறுவனர் அதியமான் கார்த்திக் ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.


- தினமலர் வாசகர் மகேஸ்வரன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us