/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
தான்சானியா தமிழ் சங்கச் சார்பாக குழந்தைகள் தின கொண்டாட்டம்
/
தான்சானியா தமிழ் சங்கச் சார்பாக குழந்தைகள் தின கொண்டாட்டம்
தான்சானியா தமிழ் சங்கச் சார்பாக குழந்தைகள் தின கொண்டாட்டம்
தான்சானியா தமிழ் சங்கச் சார்பாக குழந்தைகள் தின கொண்டாட்டம்
டிச 06, 2025

தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பாக குழந்தைகள் தின கொண்டாட்டம் டைமண்ட் ஜூப்ளி அரங்கத்தில் தமிழ் சங்கத் தலைவி ரமாதேவி சங்கரன் மற்றும் துணைத் தலைவி அனுராதா சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. தான்சானியா இந்திய தூதரக உயர் ஆணையர் பிஸ்வதிப் தேவ் , மயூரா தேவ், Swami Vivekananda Cultural Center Tanzania Director Dr.சௌமியா சவான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தான்சானியா மற்றும் இந்திய தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்க நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழ் சங்கத்தின் நல உதவி சார்பாக Tzs 37.5million மதிப்புள்ள காசோலையை DR.Trish (TLM)க்கு வழங்கப்பட்டது. Tanzania Tamil Sangam Team Junior & Senior Team, Noopur School of Dance, ஆகியோர்களின் கலை கலை நிகழ்ச்சி உடன் Indian School Tanzania, Shree Patel Samaj, Kaveri Kannada Sanga, Kamandalam Tanzania, Tarangini Telugu Cultural Association, Hindi Hai Ham, Dar Es Salaam International Academy ஆகிய கலை குழுக்கள் பங்கு பெற போட்டி ஆரம்பமானது.1000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
போட்டியின் நடுவர்களாக டாக்டர் சௌமியா சவான், மீத்தேல் கிருபாகரன், அனகா பட் பட் ஆகியோர் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணியினருக்கு தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பில் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது.
விழாக்குழு உறுப்பினர்களான தேன்மொழி கோவிந்தன், கீதா சங்கரநாராயணன், பார்வதி ஸ்ரீதர், கிரிஜா ராகவேந்திரன், வருணா அருண், வீணா ஜானகிராமன், சரண்யா அன்புமணி, செல்வி சகாயராஜ், அபிஷா மெரிசன் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர்
- தான்சானியாவில் இருந்து நமது செய்தியாளர்ர் தானேஷ் ராஜா
Advertisement

