/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
எத்தியோப்பியாவில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு; பன்னாட்டு சிறப்பு சொற்பொழிவு
/
எத்தியோப்பியாவில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு; பன்னாட்டு சிறப்பு சொற்பொழிவு
எத்தியோப்பியாவில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு; பன்னாட்டு சிறப்பு சொற்பொழிவு
எத்தியோப்பியாவில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு; பன்னாட்டு சிறப்பு சொற்பொழிவு
செப் 12, 2025

வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம், எத்தோபியா டாம்பி டோலோ பல்கலைக்கழகம், இணைந்து நடத்தும் தொடர் பன்னாட்டுச் சிறப்புச் சொற்பொழிவு நடந்தது.
தமிழ் இலக்கியமும் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையும் என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். கூகுள் இணைய வழி காணொளி மூலம் இந்த சொற்பொழிவு நடந்தது.
எத்தோபியா வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்க தலைவரும், எத்தியோப்பியா அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான முனைவர் கிருஷ்ணராஜ் ராமசுவாமி தலைமை தாங்கினார். லண்டனில் உள்ள உலகளாவிய தமிழ்ப்பள்ளி ஆலோசகர் வ. அசோக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சிறப்புச் சொற்பொழிவாளர்கள்
லண்டன் உலகளாவிய தமிழ்ப்பள்ளி ஆசிரியை நர்மதா குமரன், தமிழகத்தில் இருந்து அருப்புக்கோட்டை மேலக்கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த மு.இராஜபாண்டி, இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, முதுகலைத் தமிழாசிரியர் க.முத்துராஜ், அழகிச்சிபட்டி , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியை யோகேஸ்வரி, வீரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,இடைநிலை ஆசிரியை இரா.கவிதா, ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பால் பாண்டியம்மாள் நிகழ்ச்சி நெறியாள்கை வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர் சங்கர் கலியன் மாநாட்டின் நோக்கவுரையாற்றினார்.
பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் தலைவர்-நிறுவனர் பா.ஜான்சிராணி சொற்பொழிவு ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு ஏற்றார்.
பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம். தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை செல்வலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
அருள்மிகு கொளஞ்சியப்பர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் முதுகலை முதலாமாண்டு மாணவர் செ.நவீன்குமார் நன்றியுரையாற்றினார்.
எத்தியோப்பியாவில் இருந்து நமது தினமலர் வாசகர், டாக்டர். கிருஷ்ணராஜ் ராமசாமி .
Advertisement