/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
மகர ஜோதியாய் வந்தார் ஐயப்பன்!
/
மகர ஜோதியாய் வந்தார் ஐயப்பன்!

கானாநாட்டில் உள்ள அக்ராவில் உள்ள இந்து மடாலய கோவிலில் மகர விளக்கு உற்சவம் மிக சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் நடைபெற்றது. 30 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்வில் பக்தர்கள் பரசவத்துடன் பங்கேற்றனர்.
ஆப்பிரிக்க பக்தர்கள் முன்னின்று நடத்திய இந்நிகழ்வில், வேத மந்திரங்கள் ஒலிக்க அதனைத் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது. தொடர்ந்து பஜனைகள் மற்றும் ஐயப்ப பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்கள் ஆன்மிக உற்சாகத்தில் திளைத்தனர்.
நிகழ்வின் முக்கிய பகுதியாக பதினெட்டு படிகளில் விளக்கேற்றி படிப்பாடல் பாடப்பட்டது. பக்தர்களின் சரண கோஷங்கள் விண்ணைப் பிளந்தது. சுவாமி ஐயப்பனின் அருளுக்கு பாத்திரமாகிய பக்தர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிகழ்வில் இந்திய மற்றும் ஆப்பிரிக்க பக்தர்கள் இனைந்து பக்தியை வெளிப்படுத்தினர். இரு சமூகங்களும் ஸ்வாமி ஐயப்பனின் அருள் பெற ஆழ்ந்த பக்தியுடன், ஆன்மிக ஈடுபாட்டுடனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் உயர்ந்த பக்தி நிலையை வெளிப்படுத்தினர்.
இறுதியாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவை பக்தர்கள் வெகுவாக பாராட்டினர்.
- அக்ராவிலிருந்து நமது செய்தியாளர் அரவிந்த் என் ஜி
Advertisement

