/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
சென்னையைச் சேர்ந்தவர் கிளிமஞ்சாரோ மலை ஏறி சாதனை
/
சென்னையைச் சேர்ந்தவர் கிளிமஞ்சாரோ மலை ஏறி சாதனை
ஆக 08, 2023

சென்னை மைலாப்பூரை சேர்ந்த பாலாஜி சேஷாத்திரி, இவர் மேற்கு ஆப்பிரிக்கா நாடான கானாவில் மருந்து வணிகம் செய்யும் நிறுவனத்தில் நிதி மேலாளராக பணியாற்றிவருகிறார். மலையேற்றத்தில் அனுபவம் பெற்றுள்ள பாலாஜி,ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தன்சானியா நாட்டின் கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்திருக்கிறார்.
கிளிமஞ்சாரோ மலை தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்தது. ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகளில் மிக உயர்ந்தது, மேலும் இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். இந்த உயரத்தை ஏற்றினால் மட்டுமே இந்த மலையேறும் முயற்சி முழுமை அடைந்ததாகும் என்றும், இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லையென்றாலும், கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலையாம் , அதனால் உலகில் உள்ள தனிமலைகள் அனைத்திலும் மிக உயரமான மலை கிளிமஞ்சாரோ என்று பாலாஜி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்தார்.
தன்னுடைய இந்த முயற்சி வெற்றி பெற்றதால் ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு மலைகளை ஏறும் எண்ணமும் உள்ளதாக தெரிவித்தார் பாலாஜி. ஐந்து நாட்களில் எற வேண்டிய உயரத்தை நான்கே நாட்களில் ஏறி முடிக்கவேண்டும் என்ற உறுதியோடு எறியதாக கூறினார் பாலாஜி. நண்பர்கள் பிரேம் குமார், செந்தில் குமார், குரு பிரசாத், அரவிந்த் மற்றும் பாலாஜி பணிபுரியும் நிறுவனத்தின் ஊழியர்கள் என அனைவரும் வாழ்த்தினர்.
- தினமலர் வாசகர் அரவிந்த் என் ஜி
Advertisement