/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
கெய்ரோவில் இந்திய சுற்றுலாத்தலங்கள் குறித்த ஓவியப் போட்டி
/
கெய்ரோவில் இந்திய சுற்றுலாத்தலங்கள் குறித்த ஓவியப் போட்டி
கெய்ரோவில் இந்திய சுற்றுலாத்தலங்கள் குறித்த ஓவியப் போட்டி
கெய்ரோவில் இந்திய சுற்றுலாத்தலங்கள் குறித்த ஓவியப் போட்டி
நவ 22, 2024

கெய்ரோ : எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தொடர்பான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் கெய்ரோ, ஜிசா மற்றும் கல்யுபியா ஆகிய கவர்னரகங்களை சேர்ந்த 7,500 க்கும் மேற்பட்ட பள்ளிக்கூட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அவர்கள் இந்தியாவின் சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் குறித்து வண்ணங்களை தீட்டி ஓவியப் போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பான வகையில் ஓவியங்களை வரைந்த மாணவ, மாணவியருக்கு இந்திய தூதரக அதிகாரி பரிசுகளை வழங்கி கௌரவித்தார். ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனால் மாணவ, மாணவியர் உற்சாகம் அடைந்தனர்.
-_ நமது செய்தியாளர் காஹிலா
Advertisement